பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/757

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெண்காட்டடிகள் 74}.

வடக்கயிற்றைப் பூட்டியிழுத்து நின் திருவடியாகிய நீண்ட கரையிலே சேரும்படி செய்து எங்களை உய்வித்தருளல் வேண்டும் என இறைவனை வேண்டுவதாக அமைந்தது,

அறிவில் ஒழுக்கமும் பிறிதுபடு பொய்யும் கடும்பிணித் தொகையும் இடும்பை யீட்டமும் இனையன பலசரக் கேற்றி வினையெனும் தொன்.மீ காமன் உய்ப்ப அந்நிலைக் கருவெனு நெடுநகர் ஒரு துறை நீத்தத்துப் புலமெனுங் கோண்மீன் அலமந்து தொடரப் பிறப்பெனும் பெருங்கடல் உறப்புகுந் தலைக்கும் துயர்த்திரை யுவட்டி ற் பெயர்ப்பிடம் அயர்த்துக் குடும்பம் என்னும் நெடுங்கல் வீழ்த்து நிறையெனுங் கூம்பு முறிந்து குறையா உணர்வெனும் நெடும்பாய் கீறிப் புணரும் மாயப் பெயர்ப்படு காயச் சிறைக்கலம் கலங்குபு கவிழா முன்னம் அலங்கல் மதியுடன் அணிந்த பொதியவிழ் சடிலத்துப் பையர வணிந்த தெய்வ நாயக தொல்லெயி லுடுத்த தில்லை காவல வம்பலர் தும்பை யம்பல வானதின் அருளெனு நலத்தார் பூட்டித் திருவடி நெடுங்க ை சேர்த்துமா செய்யே.

எனவரும் ஆசிரியப்பாவாகும்.

நுரையும் அலையும் சுழற்சியும் எல்லையற்ற நீர்த்திவலை

களும் ஒலிக்குங் கடலிடத்தே பெருத்துஞ் சிறுத்தும் எண் ணிலவாய்த் தோன்றி மீளவும் அக்கடலின்கண்ணே அடங்குமாறு போன்று, இயங்குவன நிற்பனவாகிய உலகத் தொகுதியனைத்தும் இறைவனிடத்தே தோன்றி மீளவும் அவன்கண் ஒடுங்குவனவெனவும், தான் ஒன்றினுந் தோன்றி யொடுங்காத தனிமுதற் பொருளாகத் திகழ் வோன். இறைவனெனவும் விளக்கக் கருதிய திருவெண் காட்டடிகள்,

நுரையுந் திரையும் நொப்புறு கொட்பும்

வரையில் சீகர வாரியுங் குரைகடற்

பெருத்துஞ் சிறுத்தும் பிறங்குவ தோன்றி

எண்ணில வாகி யிருங்கட லடங்குந்

தன்மை போலச் சராசரம் அனைத்தும்

நின்னிடைத் தோன்றி நின்னிடை யடங்கும் நீ

ஒன்றினுந் தோன்ருய் ஒன்றினும் அடங்காய்