பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/758

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

742

பன்னிரு திருமுறை வரலாறு


என அம்பலத்தாடும் உம்பர் நாயகனுகிய சிவபெருமானைப் போற்றிப் பரவுகின் ருர் உலகனைத்தும் இறைவன்பால் தோன்றியொடுங்குவன என்னுங் கருத்தமைந்த இத் தொடரை ஆதாரமாகக் காட்டிப் பிரபஞ்சத்திற்கு இறை வனே முதற்காரணமென்பது அடிகள் கருத்தெனச் சாதிப் பாரும் உளர். அன்னேர் கூறிய வண்ணம் இப்பிரபஞ்சம் இறைவனுகிய முதற் காரணத்திலிருந்து தோற்றியதென் பது உண்மையாயிருக்குமானல் முதற் காரணத்தின் குணங் களோடு ஒத்த குணங்களே அதனிற்ருேன்றிய காரியத்திற் கும் உளவாதல் வேண்டுமென்னும் நியமம் பற்றி இறைவ னிடத்திற்ருேன்றிய பிரபஞ்சம் அறிவுடைய சித்துப் பொருளாதல் வேண்டும். உலகம் அறிவற்ற சடப்பொருல் என்பது யாவர்க்கும் உடம்பாடாதலின், சடப்பொருளாகிய அது, சித்துப்பொருளாகிய இறைவனை முதற் காரணமாகக் கொண்டு தோன்றியதெனக் கூறுதல் பொருந்தாது. பிர பஞ்சம் மாயையாகிய உள்பொருளிலிருந்து தோன்றி விரிந்து மீளவும் அதன்கண் ஒடுங்குமென்பதே திருமூலர் முதலிய திருமுறையாசிரியர்களின் துணியாகும் கிழங்கா கிய மூலத்திலிருந்து முளைத்த தாமரையைக் கிழங்கிற்கு ஆதாரமாகிய சேற்றில் முளைத்தது என்ற பொருளிற் பங்கஜம் ' என வழங்குவதுபோன்று, மாயையாகிய உள் பொருளிலிருந்து தோன்றி மீளவும் அதன்கண் ஒடுங்குவ தாகிய உலகத் தொகுதியை மாயைக்கு ஆதாரமாகிய முதல்வனிடத்துத் தோன்றியொடுங்குவதாகக் கூறுதல் வழக்கியல் மரபாகும். இம்மரபின்படி நீரில் தோன்றி யொடுங்கும் து ைஅலை முதலியவற்றை நீர்க்கு இட மாகிய கடலிலே தோன்றியொடுங்குதல்போல் எனத் திருவெண்காட்டடிகள் உவமையாக எடுத்தாளுதலால், சராசரமாகிய . உலகத்தொகுதிக்கு இறைவன் ஆதார மாவதன்றி முதற் காரணமா கான் என்பதே அடிகள் கருத்தென்பது இனிது புலனுகின்றது. நின்னிடைத் தோன்றி நின்னிடையொடுங்கும் " என்றது மாயைக்குத் தாரகமாதல் பற்றியென்றுணர்க. அக்கருத்து உணர்ந்து கோடற்கன்றே நீரிற்ருேன்றி யொடுங்கும் நுரை முதலிய வற்றை நீர்க்கிடமாகிய கடலிற்ருேன்றி யொடுங்குதல் Gur என்ஆ உவமை கூறினராகலின், ஆண்டு ஆசங்கைக் கிடமின்மையுணர்க" எனச் சிவஞான

1. சிவஞானபோதம் பேருரை, 2-ம் சூத்திரம் 2-ம் அதிகரணம்,