பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/759

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெண்காட்டடிகள் 743

சுவாமிகள் இத்தொடர்ப் பொருளைத் தெளிவுபடுத்தினமை இவண் கருதத்தகுவதாம்.

இங்ங்னமே கோயில் நாண்மணி மாலையிலுள்ள பாடல் கள் யாவும் உயர்ந்த நுண்பொருளை யறிவுறுத்தி நிற்றல் அறிந்து மகிழ்தற் பாலதாகும். இந் நான்மணிமாலையி லுள்ள சந்த விருத்தங்கள் அருணகிரிநாதர் பாடிய திருப் புகழ் யாப்பிற்கு அடிப்படையாக அமைந்துள்ளன. தாளத் தொடு பொருந்த அமைந்த இச் சந்த விருத்தங்களின் யாப்பமைதியினைப் பின்பற்றி அடிதோறும் இறுதிக்கண் தொங்கல் என வழங்கும் தனிச் சொற்களைச் சேர்த்து நோக்குங்கால் இத்தகைய திருப்புகழ்ச் சந்தங்கள் உரு வாதல் காணலாம். செந்தமிழ்ப் பாடல்களின் தாள வமைதிக்குச் சிறந்து விளங்கும் இவ்வகைப் பாடல்கள் செந்தமிழ்க் கடவுளாகிய முருகப்பெருமானது பொருள் சேர் புகழைச் சீர்பெற விரித்துரைத்தற்கு ஏற்றனவாக அமைந்தமையால் இவ்வகைப் பாடல்களையே அருணகிரி நாதர் முருகன் புகழ் பாடுதற்குரிய சந்தப் பாடல்களாகத் தெரிந்தெடுத்துக் கொள்வாராயினர். இத்திருப்புகழ் யாப்பு முதன் முதல் இக் கோயில் நான்மணி மாலையிலே கருக்கொண்டு தோன்றிப் பின்னர் அருணகிரிநாதரது வாக்கின் திறத்தால் திருப்புகழ்ப் பாடல்களாக உருப் பெற்று வளர்ந்ததெனக் கூறுதல் பொருந்தும்,

திருக்கழுமல மும்மணிக்கோவை

கழுமலம் என்பது சீகாழிக்குரிய பன்னிரண்டு பெயர் களுள் ஒன்று. இறைவன் கோயில் கொண்டெழுந்தருளிய திருக்கழுமலம் என்னும் சீகாழிப்பதியை அகவல், வெண்பா, கலித்துறையாகிய மூவகைப் பாக்களாற் போற்றிப் பரவிய பாமாலையாதலின் இது திருக்கழுமல மும் மணிக்கோவை யென்னும் பெயர்த்தாயிற்று. திருவளர் பவளப் பெருவரை யெனத் தொடங்கும் பாடலை முத லாகக் கொண்டு திகழும் இப்பனுவலில் இப்போது பன்னி ரண்டு பாடல்களே கிடைத்துள்ளன. பன்னிரண்டாம் பாடலின் இறுதிச்சீர் முதற் பாடலின் முதற் சீரோடு மண்டலித்து முடியாமையாலும் மும்மணிக்கோவை யென்

1. யாழ்நூல் 888 - 390-ஆம் பக்கங்களைப் பார்க்க.