பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/761

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெண்காட்டடிகள் 745

இம் மும்மணிக் கோவையின் முதற் பாடலாகும். சிவபாத விருதயர் பெற்ற தவப்புதல்வராகிய தளர்நடைப் பருவத்து இளங்குழந்தை பிரம தீர்த்தத்துள் முழுகி மந்திரம் செபிக் கும் தம் தந்தையைக் காணுது பசியால் வருந்தி அம்மே அப்பா என அழைத்து அழுத ஓசையைக்கேட்டுத் தோணி புரத்தில் எழுந்தருளிய பெருமான் பெரிய பெருமாட்டி யாகிய உமையம்மையாருடன் விடையின் மீதெழுந்தருளிப் பிரம தீர்த்தக் கரையை யடைந்து அங்கு நின்று அழுது கொண்டிருந்த பிள்ளைக்கு ஞானப்பாலடிசிலேக் குழைத் தூட்டியருளிய செய்தியையும், அங்ங்னம் ஆளுடைய பிள்ளையாராகிய திருஞானசம்பந்தர் எச்சில் மயங்கிட நினக்கு இதனைக் கொடுத்தார் யாவர் என வெகுண் டுரைக்கும் தம் தந்தையை நோக்கி ' எம்மை யிது செய்தபிரான் இவனே எனக் கையாற் சுட்டிக்காட்டித் தோடுடைய செவியன் என்னுந் திருநெறிய தமிழால் அடையாளங்களுடன் வெளியிட்டருளிய திறத்தையும்,

தா தையொடு வந்த வேதியச் சிறுவன் தளர்தடைப் பருவத்து வளர்பசி வருத்த அன்குயோ வென்துழைப். முன்னின்று ஞானபோனகத் தருளட்டிக் குழைத்த ஆளுத்திரளை அவன் வயினருள அந்தணன் முனிந்து தந்தா ரியாரென அவனைக் காட்டுவன் அப் வானுர் தோடுடைய செவிய னென்றும் பீடுடைய பெம்மா னென்றும் கையிற் சுட்டிக் காட்ட ஐயநீ வெளிப்பட் டருளின ஆங்கே.

என அடிகள் இம்முதற்பாடலில் உளங்குழைந்து போற்றி யுள்ளார்.

'ஆரணம் நான்கிற்கும் அப்பாலவன் அந்தக்கரணங் கடந்த அரும்பொருள்' என மாற்ற மனங்கழிய நின்ற இறைவனது திறத்தினை விரித்துரைத்த அடிகள், தம் உயிர்க்குயிராகிய இறைவனை நினைத்தற்குத் தடையா யுள்ள மனமாசுகளைக்களைந்து இறைவன் வீற்றிருத்தற்குத் தக்கதாகத் தம் நெஞ்சத்தினத் தூய்மைப்படுத்திய திறத்தை விரித்துரைப்பது,