பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/762

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

746

பன்னிரு திருமுறை வரலாறு


கருமுதற் ருெடங்கிப் பெருநாளெல்லாம் காமம் வெகுளி கழி பெரும் பொய்யெனும் தூய்மையில் குப்பை தொலைவின்றிக் கிடந்ததை அரிதின் இகழ்ந்து போக்கிப் பொருதிறன் மையிருள் நிறத்து மதனுடை அடுசினத்து ஐவகைக் கடாவும் யாப்பவிழ்த் தகற்றி அன்புகொடு மெழுகி அருள் விளக் கேற்றித் துன்ப இருளைத் துரந்து முன்புறம் மெய்யெனும் விதான ம் விரித்து நொய்ய கீழ்மையிற் ருெடர்ந்து கிடந்தவென் சிந்தைப் பாழறை யுனக்குப் பள்ளியறை யாக்கிச் சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவிசு எந்தை நீ இருக்க இட்டனன் இந்த நெடுநில வளாகமும் அடுகதிர் வானமும் அடையப் பரந்த ஆதி வெள்ளத்து துரையெனச் சிதறி இருசுடர் மிதப்ப வரைபறித் தியங்கும் மாருதங் கடுப்ப மாலும் பிரமனும் முதலிய வானவர் காலம் இதுவெனக் கலங்கா நின்றுழி மற்றவர் உய்யப் பற்றிய புனையாய் மிகநளிை மிதந்த புகலி நாயக அருள் நனி சுரக்கும் பிரளய விடங்கநின் செல்வஞ் சிலம்பு மெல்லென மிழற்ற அமையாக் காட்சி யிமையக் கொழுந்தையும் உடனே கொண்டிங்கு எழுந்தருளத்தகும் எம்பெருமானே.

எனவரும் பாடலாகும். தாழ்ந்த குணங்களிலே பிணிப் புற்றுக்கிடந்த என் மனமாகிய பாழறையிலே கருவுற்ற நாள்முதலாக இன்றுவரை கழிந்த காலங்களிலெல்லாம் காமம் வெகுளி பொய் என்னும் இக்குற்றங்களால் விளைந்த தீமையாகிய இழிந்த குப்பைகள் மூடிக்கிடந்தவற்றை அரிதின் நீக்கி, எதிர்த்துத் தாக்கும் வன்மைமிக்க ஐம் புலன்களாகிய கடாக்கள் கட்டப்பட்டு நின்றனவற்றைக் கட்டவிழ்த்துத் துரத்தி, அவற்ருற் புழுதியான அவ் விடத்தை அன்பெனும் நீரால் மெழுகித் தூய்மைசெய்து, அருளாகிய விளக்கை ஒளிபெற ஏற்றிவைத்து, துன்ப மாகிய இருளைப்போக்கி, வாய்மையாகிய மேற்கட்டியை மேலேவிரித்து, என் சிந்தையாகிய அறையை எந்தை யாகிய நீ இனி தமர்தற்கு ஏற்ற பள்ளியறையாகச் செய்து, அதன் நடுவே அகத்தாமரையாகிய பூந்தவிசினை இட்டு வைத்துள்ளேன். எப்பெருமானுகிய நீ நின்செல்வச் சிலம்பு