பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/763

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெண்காடடடிகள் 74's

மெல்லென மிழற்ற உமையம்மையாருடன் அடியேனது உள்ளமாகிய இவ்விடத்திலே எழுந் தருளுதல் வேண்டும்” என அடிகள் புகலிநாயகனை வேண்டுகின் ருர், இவ்வேண்டு கோள் உலக மக்கள் மனந் திருந்தி இறைவனை வ்ழிபட்டுய் யும் முறையினை நன்கு அறிவுறுத்துவதாகும். சீகாழியாகிய திருத்தலம் ஓர் ஊழிக்காலத்திலே தேவர் முதலியோர்க்குப் பற்றுக்கோடாகி ஊழிப்பெருவெள்ளத்திலே தோணியாய் மிதந்த வரலாறு இப்பாடலில் 14 முதல் 21 வரையுள்ள அடிகளில் விரித்துரைக்கப் பெற்றமை காண்க.

" மாதொருபாகனுகிய பெருமானே, நினது திரு வுள்ளக் குறிப்பால் இவ்வுலகம் தோன்றிய நாள் தொடங்கி வேறு வேறியல்பினவாகிய பலவகைப் பிறப்புக் களிலும் உயர்திணை மக்களாகவும் அஃறிணை உயிர் களாகவும் தோன்றிய யாரும் யாவையுமாகிய உயிர்த் தொகுதியில் எனக்குத் தனித்தனியே தந்தையாகியும் தாயாகியும் வந்து உறவுகொள்ளாதவர் ஒருவருமில்லை. யானும் அவ்வுயிர்களுக்குத் தந்தையாகியும் தாயாகியும் பிறந்து உறவுகொள்ளாததுமில்லை. உலகில் யான்பிறவாத இடமுமில்லை இறவாத இடமுமில்லை. எனது உடம்பைத் தின்னத உயிர்களுமில்லை. அவற்றின் உடம்புகளை யான் தின்னத்தவறியதுமில்லை. இங்ங்னமே காலமெல்லாங் கழிந்தன. இவ்வாறு நெடுங்காலமாகப் பிறவிச் சுழலில் தடுமாறும் பழக்கம் பெற்ற யான் இனி இதற்குச் சோர்ந்து இளைக்கும் இயல்புடையனல்லேன். சோதியாய் விளங்கும் தினது திருநாமமாகிய திருவைந்தெழுத்தினை உணர்ந்தோதும் அருள்நூல்களைப் பயின்றேனல்லேன். அந்நூல்களைப் பயின்ற ஆசிரியர்களே அடைந்து கேட்டு அறிந்தவனும் அல்லேன். நாயேன் இங்ங்னம் நின்னை வழிபடுதற்குரிய தகுதியற்றவயிைனும் எனக்கு ஒய்வான காலத்தில் அடியேன் நின்ன நினைந்து இட்டது பச்சில யாயினும் அதனை நறுமணமலராகவும், யான் தின் ஆன நினைந்து சொல்வது பிழைமலிந்த சொல்லாயினும் நின் ஆன வழிபடுதற்குரிய திருமந்திரமாகவும் கொண்டு எளியேனைப் பிறப்பிறப்பென்னும் பெருங்கடலில் ஆழாதவண்ணம் நின் திருவடியாகிய நெடுங்கரையிற் சேர்த்துக் காத்தல் அருளாளனுகிய நினக்குரிய கடமையாகும்” எனக் கழுமல வானனை தோக்கி அடிகள் வேண்டிக்கொள்வதாக