பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/764

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

748

பன்னிரு திருமுறை வரலாறு


அமைந்தது ' அருள் நனிபழுத்த என்னும் முதற் குறிப்புடைய அகவலாகும்.

இறைவனது திருவருளாகிய கண்ணின் உதவியைப் பெறுதற்குமுன் இல்லன உளவாய் உள்ளன. காணுது தாம் அறியாமையாகிய இருளிற்பட்டு அல்லற்பட்ட தன்மையையும், திருவருளாகிய ஞான நாட்டம் பெற்ற பின்பு அசத்தாடய உலகத்தொகுதி மறைய இறைவனுகிய மெய்ப்பொருள் எங்குமாய் விளங்கித் தோன்றிய தன்மை யினையும் இப்பிரபந்தத்தின் பத்தாம் பாடலில் அடிகள் தெளிவாக விளக்கிய திறம் படித்துணர்ந்து மகிழத் தக்கதாம்.

போதும் பெருவி.டிற் பச்சிலையுண்டு புனலுண்டெங்கும்

ஏதும் பெருவிடில் நெஞ்சுண்டன்றேயினை யாகச் செப்பும்

சூதும் பெருமுலை பங்கர்தென் தோணி புரேசர்வண்டின்

தாதும் பெருத அடித்தா மரைசென்று சார்வதற்கே.

எனவரும் திருப்பாடல் யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை என்ற திருமந்திரப் பொருளை அடியொற்றி இறைவனடி சேர்தற்கென யாவரும் மேற்கொள்ளுதற்குரிய எளிய வழிபாட்டுமுறையை விளக்குதல் காண்க.

திருவிடை மருதூர் மும்மணிக்கோவை

சிவபெருமான் கோயில்கொண்டருளிய திருவிடை மருதென்னும் திருப்பதியை அகவல், வெண்பா, கட்டளைக் கலித்துறையென முறைப்படத் தொடுத்த முப்பது செய்யுட்களாற் போற்றிப்பரவிய பனுவலாதலின் இது திருவிடைமருதூர் மும்மணிக்கோவை யென்னும் பெயர்த் தாயிற்று.

தெய்வத்தாமரை செவ்வியின் மலர்ந்து எனத் தொடங்கும் இப்பிரபந்தத்தின் முதற்பாடல் உமையொரு பாகராகிய அர்த்தநாரீச்சுரர் திருக்கோலத்தின் இயல்பினை அழகுற விரித்துரைக்குந்திறம் படிக்குந்தோறும் இன்பந் தருவதாகும்.

அடியார்கள் பிறிதொன்றில் ஆசையின்றிப் பருகி மகிழ்தற்குரிய பெருந்தேனுக இறைவன் இடைமருதில் வீற்றிருந்து அருள்புரியும் சிறப்பினையும் அத்திருப்பதியை