பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/766

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

750

பன்னிரு திருமுறை வரலாறு


ளாலே அவன் ருள் வணங்கி" எனத் திருவாதவூரடிகள் அருளிய வண்ணம் இறைவனை நினைந்து போற்றுதற்கும் அவனருள் வேண்டும் என்ற உண்மை இப்பாடலில் நன்கு அறிவுறுத்தப் பெற்றமை காணலாம்.

செல்வத்துடன் வாழ்ந்திருக்கின்ருேமெனச் செருக் குற்று இரவலர்க்கு உதவாது தன்னுயிரைப் பாதுகாத்த லொன்றையே குறிக்கொண்டு தன்னல் ஏனையுயிர்கள் படுந் துனபத்தினைச் சிறிதும் பொருட்படுத்தாது இம்மைப் பயனும் மறுமைப் பயனும் இல்லையென்று துணிந்து தாம் விரும்பியவாறு செய்தொழுகி மின்னலைப்போல் தோன்றி யழியும் இயல்பினவாகிய உலகியற் செல்வத்தை நிலை பேறுடையதாக விரும்பித் தன்னையும் ஒப்பற்ற பெருந்தலை வராக மதித்து வாழ்தல் கீழ்மக்கள் வாழ்வாகும். இறை வனுடைய திருவடியைப் பற்றி நின்று உலகியலில் நேரும் இடையூறுகளைக் கண்டு அஞ்சுதலைவிடுத்து மக்கள் மனைவி சுற்றம் செல்வம் என்பவற்றைப் பொருளெனக் கருதாது இறைவனது திருவருளையே பொருளாக எண்ணி இந்திர பதத்தால் அடையும் பெருஞ்செல்வமும் எட்டுச்சித்திகளும் தாமே வந்த காலத்தும் அவற்றை மறுத்தொதுங்கிக் கிழிந்த கந்தையும் ஒட்டிட்டுத் தைத்த கோவணமும் அறுந்த கீளுடையுமாகக் கிடைத்தவற்றை யுடுத்துச் சிதைவுற்ற ஒடொன்றை உண்கலனுகக் கையில் ஏந்தித் தம்மை நோக்கிவந்து பிச்சையிடுவோர் உளராயின் அவர் தந்தவற்றை நின்ற நிலையிலேயே யுண்டு தரையையே பாயாகக்கொண்டு நீங்காத சாந்தம் என்னும் மனையைக் கூடி எவ்வுயிர்களையும் தம்மக்களெனக் கருதி யாவரிடத்தும் ஒப்ப அன்பு செய்தல் அருட்செல்வர்களாகிய கடவுட் டொண்டர்களின் உயர்ந்த வாழ்வாகும். இவ்விருவகை வாழ்க்கையினையும் ஆராய்ந்து நோக்குங்கால், விலங்கு களது காலின் குளம்படியாகிய சிறிய பள்ளத்தில் தங்கிய நீரும் ஊழிக்காலத்தில் அளப்பரியதாய்ப் பொங்கிய பெருங் கடல் நீரும் நீரென்ற பொதுமையான் தம்முள் ஒக்கு மாயினும் அளவாற் சிறிதும் ஒவ்வாதனவாம். ஆதலின் சிவனடியார்களுக்குத் தொண்டுபட்டு அவர்கள் குணத் துடன் நெடுங்காலம் பழகி அன்னேர் காலாலிட்ட பணியைத் தலையாலே செய்து அத்தொண்டினலுளதாம் பேற்றினை அடைந்து இன்புறுதலொன்றைத் தவிரப் பெறத்