பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/767

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெண்காட்டடிகள் 了领重

தக்கபேறு பிறிதொன்று மில்லை என அடிகள் இடைமரு தீசனை ப் பணிந்து போற்றுவதாக அமைந்தது, இம் மும் மணிக் கோவையின் ஏழாம் பாடலாகும். இதன் கண் தாம் மேவன செய்தொழுகும் கயவர் வாழ்வும் இறைவனது அருள் வழியொழுகும் மெய்த்தொண்டர் வாழ்வும் இன்ன வென அடிகள் விளக்கிய திறம் அடிகளது செம்மை மனத் தின் சிறப்பினை இனிது புலப்படுத்தல் காணலாம்.

மருதமாணிக்கத் தீங்கனியாகிய சிவபோகத்தை விளைக்குந் தொழிலினராகிய தொண்டரது உழவின் திறத்தையும், அவ்வுழவினை மேற்கொள்ளாது மனமெனும் புனத்தை வறும் பாழாக்கித் தமக்கும் பிறர்க்கும் பயனின்றிக் கழியும் ஏனையோரது இழிவையும் புலப்படுத் துவது, இம்மும்மணிக் கோவையின் பத்தாம் பாடலாகும். மனமெனும் பு ைத்தில் முளைத்துள்ள வஞ்சனையாகிய மரத்தை வேருடன் அகழ்ந்து நீக்கி, அன்பெனும் பாத்தி கோலி மெய்மையாகிய எருவிட்டுப் பத்தி யென்னும் விதையை விதைத்து, ஆர்வமாகிய நீரைப் பாய்ச்சி, ஐம் பொறிகளென்ற பட்டி மாடுகள் உள்ளே நுழையாதபடி சாந்தமாகிய வேலியை அமைத்துக் காக்க, ஞான மெனும் முளை முலை. த்தெழுந்து, அருளாகிய பசுந்தளிர்கள் தளிர்த்து விளங்க, ஒழியாத காமம் வெகுளியாகிய களை களைக் களைந்தெறிந்து சேமமாகக் காத்துவரும் நிலையில் அப்பயிர் செம்மையாக வளர்ந்து மெய்மயிர் முகிழ்த்துக் கண்ணிரரும்பிக் கடிமலர் மலர்ந்து திருவைந்தெழுத் தெனுங் காய் தோன்றி, நீலகண்டமும் முக்கண்ணும் எட்டுத் தோள்களும் ஐந்து திருமுகமும் பவளம்போலும் செந்நிறமுமுடையதாய் வெள்ளே நீறுபூசி அறுசுவை யதனினும் மிக்க சுவையுடையதாய்க் காணினும் கேட்பினும் கருதினும் இனிமை தருவதாய் நிலவெல்லையைக் கடந்து உயர்ந்த மருத மாணிக்கமென்னும் இனிய கனி மெல்ல மெல்லமுற்றிப் பழுத்து எளிதிற் கைவரப் பெற்றுத் தொண் டவுழவராகிய மெய்யடியார்கள் அக்கனிலனை இனிதின் அருந்திச் செம்மாந்திருப்பார்கள். இங்ங்னமாகவும் சிலர் தம் மனமாகிய புனத்தைப் பண்படுத்தாது வறும் பாழாக்கிக் காமக் காடுமுடி ஐம்புல வேடர்கள் ஆறலைத்துத் திரியவும் சிற்றின்பமாகிய கானல் நீர் ஓடவும் கல்லாவுணர்வாகிய மானினம் வருந்தியுழலவும் ஆசையெனும் விதை