பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/769

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெண்காட்டடிகள் 758

நாடியோ என்போ நரம்புசிக் கோழையோ w தேடி யெனையறியேன் தேர்ந்தவகை-நாடி அரன் தன் ளுலே தன்னையுங் கண்டு தமைக்காளுர் என்னும் என அறிவார் இன்று. எனவரும் வெண்பாவில் ஆசிரியர் மெய்கண்ட தேவ நாயனுர் தெளிவாக விளக்கியுள்ளார். இவ்வெண்பா திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில் வரும் மேவிய புன்மயிர்த் தொகையோ என்ற முதற் குறிப்புடைய திருப்பாடற் பொருளை அடியொற்றியமைந்த தென்பது இவ்விரு செய்யுட்களையும் ஒப்புநோக்கி யுணர்வார்க்கு இனிது விளங்கும். " நின்னக் காணுமாந்தர், தன்னையுங் காளுத் தன்மையோரே " என ஒதியவாற்ருன் ஏனைப் பசு பாசங்களும் சிவஞானத்தானன் றி அறியப்படாவென்பது போதரும் " என்றும், " ஆன்மா பிற வுயிர்களைத் தனித்த முதலாய்ப் பிரித்தறியுமாறு இல்லையாயினும் சிவத்தைத் தரிசிக்கும் வழித் தான் அதுவாய் நின்று தைைனயறியுமாறு போலப் பிறவுயிர்களையும் அச் சிவத்தின் வண்ணமாய்க் கண்டறிதல் அமைவுடைத்தென்பது,

என்னையுங் கண்டேன் பிறரையுங் கண்டேன் தின்னிலை யனைத்தையுங்கண்டேன் என்னே நின்னைக் காணுமாந்தர் தன்னையுங் காணுத் தன்மையோரே'

என்பதனுற் புலனும்" என்றும் சிவஞான முனிவர் இத் திருப்பாடற் பொருளை இனிது விளக்கியுள்ளார். சிவரூபத் தால் ஆன்ம தரிசனமும் சிவ தரிசனத்தால் ஆன்ம சுத்தியும் ஆமாறு கூறிற்று இப்பாடல் எனக்கொள்ளுதல் பொருந்தும்.

சிவபெருமானை நினையாமலும் திருவைந் தெழுத்தினை முறைப்படி ஓதாமலும் பச்சிலையும் நீருங்கொண்டு வழிபாடு செய்யாமலும் வேறு யாராகவோ நினைக்கும் புறச்சமயத்தா ருள் ளத்திலும் இடை மருதீசன் பொன்னர் திருவடியே நண்ணி அருள் வழங்கும். ஆறு சமயத்தார் செய்யும் வழி பாடுகளெல்லாம் இடைமருதீச ைெருவனையே வந்து சார்வன என்னும் உறுதியுடையவர் திருவெண்காட்டடிக ளென்பது, . - -:

ஓராதே யஞ்செழுத்து முன்குதே பச்சிலையும் நேராதே நீரும் நிரப்பா தே-யாராயோ

43