பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/770

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

754

பன்னிரு திருமுறை வரலாறு


எண்ணுவா ருள்ளத் திடைமருதர் பொற்பாதம் நண்ணுவா மென்னுமது நாம். அன்றென்றும் ஆமென்றும் ஆறு சமயங்கள் ஒன்றென்ருே டொவ்வா. துரைத்தாலும்-என்றும் ஒருதனையே நோக்குவா ருள்ளத் திருக்கும் மருதனையே நோக்கி வரும். எனவரும் மும்மணிக்கோவைச் செய்யுட்களால் இனிது புலனும். இப்பாடல்கள்,

எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க் கிங்கே யென் றருள் புரியும் எம்பெருமான் ' என ஆளுடைய பிள்ளையாரும்,

" விரிவிலா அறிவிஞர்கள் வேருெரு சமயஞ்செய்து

எரிவினுற் சொன்னரேனும் எம்பிராற் கேற்றதாகும்' “ஆறு சமயத் தவரவரைத் தேற்றுந் தகையன " "ஆரொருவ ருள்குவா ருள்ளத்துள்ளே

அவ்வுருவாய் நிற்கின்ற அருளுந்தோன்றும் ' என ஆளுடைய அரசரும் அருளிய பொருளுரைகளை இனிது புலப்படுத்தி அடிகளது சமயப் பொதுமையை நன்கு அறிவுறுத்துவனவாதல் காண்க

உயிர்களது நலங்கருதி உடல், கருவி, உலகு, நுகர் பொருள் என்பவற்றைத் தந்தருளிய இறைவன், தன் அருளாரின் பப் பெருவாழ்வை எவ்வுயிர்க்கும் உரியதாக அமைத்து வைத்துள்ளானதலின், அவன்பால் ஒரு சிறிதும் குற்றமில்லை. அப்பெருமான நினைந்து போற்றி அவனரு ளால் இடர்ப்பகைகளைக் களைந்து கூற்றுவனது ஆற்றலை யழித்து இறப்பையும் பிறப்பையும் இகழ்ந்து வானேரது பசுவாகிய காமதேனுவின் கன்றைப் போன்று கவலையற்றுத் திரியும் பேரின்ப வாழ்வினைப்பெறும் வசதி, எல்லா மக்க ளுக்கும் பொதுவாக இறைவல்ை அளிக்கப்பெற்றுளது. அவ்வசதியைப் பயன்படுத்திக்கொள்ளாத தீவினையாளர் கண்ணதே குற்றம். அஃது எவ்வாறென்ருல், அறுசுவை யுடன் கூடிய நல்ல உணவு சமைக்கப் பெற்றிருக்கவும் அதனைப் புசியாது ஒருவன் பசியால் வருந்துதல் அவ்வுன வின் குற்றமன்று. நல்ல மணப் பொருள் விரவிய இன் சுவைத் தண்ணிர் இருக்கவும் நீர்வேட்கையுடையாைெரு வன் அந்நீரைப் பருகாது வருந்துதல் நீரின் குற்றமன்று. நன்னிழலைத் தரும் குளிர் பூஞ்சோலை வழியிடையேயிருக்க