பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/773

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெண்காட்டடிகள் *57

சிவபெருமானைப் போற்றிப்பரவுவதாகலின் திருவேகம்ப முடையார் திருவந்தாதி யென்னும் பெயர்த்தாயிற்று. இப்பனுவல் இறைவனது திருவருட்டுனை கொண்டு பாடப் பெற்றதென்பதும், இவ்வந்தாதி நூறு பாடல்களால் இயன்றமைபற்றி இதற்குப் பதிற்றுப்பத்து என அடிகள் பெயரிட்டனரென்பதும்,

காட்டிவைத்தார் தம்மை யாங்கடிப் பூப்பெய்யக்

காதல் வெள்ளம் ஈட்டிவைத்தார் தொழும் ஏகம்பர் ஏதும் இலாத எம்மைப் பூட்டி வைத்தார் தமக் கன்பது பெற்றுப் பதிற்றுப்பத்துப் பாட்டிவைத்தார் பரவித்தொழுதாம் அவர் பாதங்களே. எனவரும் இந்நூல் 99-ஆம் பாடலால் இனி விளங்கும்.

" திருக்கச்சி யேகம்பத்தில் எழுந்தருளிய பெருமானே, மெய்ஞ்ஞானத்தால் நின்னே வழிபட்டொழுகும் மெய்த் தொண்டர்கள் செல்லும் ஞானநெறி யிதுவென உணர்ந்தி லேன். சரியை கிரியையாகிய கைத்தொண்டு செய்து நின் கழல் போற்றும் அடியார்கள் தொண்டினை உவந்து மேற்கொண்டேனல்லேன். உடல் வளர்க்கம் உண வினையே விரும்பிப் பொய்யேயுன்னைப் போற்றிப் புறமே திரியும் இத்தொண்டனேணுகிய எளியேனது பணியையும் ஏற்றுக்கொள்வாயோ " என அடிகள் திருவேகம்பப் பெருமான் முன்னின்று குறையிரந்து வேண்டுவதாக அமைந்தது,

மெய்த்தொண்டர் செல்லும் நெறியறியேன் மிக நற்பணிசெய் கைத்தொண்டர் தம்மிலும் நற்ருெண் டுவந்திலன் .

உண்பதற்கே பொய்த்தொண்டு பேசிப் புறம் புறமே உன்னைப் போற்றுகின்ற இத்தொண்டனேன் பணி கொள்ளுதியோகச்சி யேகம்பனே

எனவரும் இத்திருவந்தாதியின் முதற்பாடலாகும்.

சிவபெருமானுக்குத் தொண்டுபட்டதன் பயன் அவனடியார்களுக்குப் பணிசெய்தொழுகுதலே யென்பதும், அடியார்களது திருவடித்துள்ளியைத் தலைமேற்கொள் வாருள் ளம் தெளிவுபெறுமாதலால் அவர்கள் சிவனருள் பெறுதல் ஒரு தலையென்பதும், சிவபெருமான் திருவடியை வணங்கு தற்கே தம் தலையினைப் பயன்படுத்தும் பெரு வேட்கையுடைய மெய்யடியார்களோடு இணங்கிப் பழகுவ

தன்றி ஏனையரோடு தாம் நெருங்கிப்பழகுவது இல்லை