பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/774

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

758

பன்னிரு திருமுறை வரலாறு


யென்பதும், பிறதெய்வங்களை இறைவனுக எண்ணிப் புலமைமிக்கோர் பாடும் செய்யுட்பொருள் முடிவில் ஏகம்ப வானளுகிய முழு முதற்பொருளைச் சென்று சார்வதால் நூலென மதிக்கப்படுவது அன்றிச் சார்தலில்லையாயின் அவ்வாறு மதிக்கப்படாதென்பதும் ஆகியவுண்மைகளை இவ்வந்தாதியில் 3, 4, 7-ஆம் பாடல்களில் திருவெண் காட்டடிகள் முறையே குறிப்பிட்டுள்ளார். இச்செய்யுட்களை நோக்குமிடத்து அடியார்க்குத்தொண்டுபட்டு வாழ்தலில் அடிகள் மேற்கொண்டிருந்த மனவுறுதி நன்கு புலளுதல்

காணலாம்.

பகைவேந்தரைப் பொருதுவெல்லும் ஆற்றல் மிக்க நால்வகைச் சேனைகளையுடைய பெருவேந்தராயினும் எவ்வுயிர்க்கும் இறைவராகிய ஏகம்பவாணரது திருவருள் வண்ணமாகத்திகழும் திருநீற்றினைத் தம் நெற்றியில் அணிந்து அப்பெருமானை வழிபாடு செய்யாராயின் அவ்வேந்தரது அரசியலாட்சியும் அவர்தம் வீரம் நியாயம் கொடை முதலியவற்றுக்கு அடையாளமாக முழங்கும் முரசும் இவ்வுலகில் நிலைபெரு என்பதனை,

அன்றும் பகையடர்க்கும் பரிமாவும் மதவருவிக் குன்றும் பதாதியும் தேரும்குலவிக் குடைநிழற் கீழ் நன்றும் பொலியினும் கம்பர் நன்னிறு நுதற்கில3ே ல் என்றும் அரசும் முரசும் பொலியா இருநிலத்தே, எனவரும் பாடலால் அடிகள் தெளிவாகக் கூறியுள்ளார். இத்திருப்பாடல், திருவெண்காட்டடிகள் காலத்தில் தமிழகத்தை யாண்ட மன்னர்களிற் சிவநெறியைக் கடைப்பிடித்தொழுகாதவர்கள் அடைந்த தோல்வியையும் சிவநெறியைக் கடைப்பிடித்தொழுகியவர்கள் பெற்ற வெற்றியையும் குறிப்பான் அறிவுறுத்துவதாய், உலகியலில் மக்கள் பெறும் வெற்றிக்கெல்லாம் உறுதுணையாய் விளங்குவது இறைவனது திருவருளே யென்ற உண்மையைப் புலப்படுத்தி நிற்றல் அறிந்து மகிழத் தக்கதாம்.

நிலத்தேவர் எனப் போற்றப்பெறும் தலைமையைப் பிறப்பினுலடைந்து வேதங்களை மறவாதோதி வேள்விகளை முறைப்படி செய்து வந்தாலும், திருவேகம்பப்பெருமானைப் பண்டைக் குலத்தை மறந்த தொண்டர்களோடும் கூடித் தொழும் திருவருள் நலம் வாய்க்கப்பெருதவர்கள், காடு