பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/779

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெண்காட்டடிகள் 763

புரிகின்ருய். பளிங்கு தன் கண் சார்ந்த பொருளின் தன்மை யைப் புலப்படுத்தி அவற்றின் தன்மை தனக்கெய்தலின்றித் தனித்து விளங்குமாறுபோன்று மேம்பட்டு விளங்குதல் நின்திருவுருவின் இயல்பென வுணர்ந்தோம் " என்பது இப்பாடலின் பொருளாகும். இச்செய்யுள்,

  • மெய்த்தாறு சுவையுமேழிசையு மெண்குணங்களும்

விரும்பு நால்வே தத்தாலும் அறியவொண்ணு நடைதெளியப் பளிங்கே

போல் அரிவை பாகம் ஒத்தாறு சமயங்கட் கொருதலைவன் ”

எனவரும் திருஞானசம்பந்தர் திருப்பாடற் பொருளை விரித்துரைத்தல் காண்க.

எல்லாப் பொருள்களிலும் நீக்கமறக்கலந்து விளங்கும் இறைவனுக்கு உலகமே யுருவமாதலின், அப்பேருரு வினை விட்டு விலகி நிற்கும் பொருள்கள் உலகில் இல்லை. ஆதலால் உலகப் பொருள்கள்யாவும் இறைவன் திருவுரு வத்தின் அவயவங்களாகவே கொள் ளத்தக்கன. திரிபுர மெரித்தது, தக்கன்தலை யரிந்தது, இந்திரனைத் தோள் நெரித்தது, பிரமன் தலைகளிலொன்றைக் கிள்ளியது, மன் மதனை யெரித்தது, இராவணனை விரலால் அடர்த்தது, கூற்றுவனை யுதைத்தது முதலாக இறைவன் செய்த வீரச்செயல்களெனப் போற்றப்பெற்றுவரும் இச்செயல்க ளெல்லாம், இறைவன் உலகத்தை இயக்குங்கால் அவ னருளினை யெதிரேற்றுக் கொள்ளாதார் செய்த வினை வயத் தால் நிகழ்ந்த நிகழ்ச்சிகளெனக்கொள்வதல்லது, இறை வன் தனக்குப் புகழுண்டாக விரும்பிச் செய்த வீரச்செயல் களென. மெய்யுணர்வுடையோர் கொள்ளமாட்டார்கள். இவ்வுண்மையினை,

உருவாம் உலகுக் கொருவளுகிய பெரியோய் வடிவிற் பிறிதிங் கின்மையின் எப்பொரு ளாயினும் இங்குள தாமெனின் அப்பொருள் உனக்கே அவயவ மாதலின் முன்னிய மூவெயில் முழங்கெரி யூட்டித் தொன் னிர் வையகந் துயர் கெடச் சூழ்ந்ததும் வேள்வி மூர்த்திதன் தலையினை விடுத்ததும் நீள்விசும் பாளிதன் தோளினை நெரித்ததும்

ஓங்கிய மறையோ ற் கொருமுகம் ஒழித்ததும் பூங்கணை வேளைப் பொடிபட விழித்ததும்