பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

பன்னிரு திருமுறை வரலாறு


கொண்டருளிய இறைவன் பால் பொன்னை ஒப்புவித்தனர் என்னும் இச் செய்தியே வாதவூரடிகள் வரலாற்றிற் கானப் படும் உயிர்நிலையான பகுதியாகும். குதிரை வாங்குதற் கென மன்னன் தந்த பொருளே அமைச்சரொருவர் அவ னது இசைவு பெருது தாம் விரும்பிய வண்ணம் செலவழிப்ப தென்பது அரசியல் நெறிமுறைக்கு ஒவ்வாத பெருங்குற்றம் என்பதனை யாவரும் நன்குனர்வர். உலகியல் ஆட்சி முறையிற் சிறிய பொறுப்பினை மேற்கொண்ட அதிகாரி களும் எளிதில் உணர்ந்து விலக்குதற்குரிய பெருங்குற்ற மாகிய இதனைப் பாண்டியனுக்குரிய அமைச்சராய் விளங்கிய திருவாதவூரர் உணராமைக்குரிய காரணம் என்ன என்பதே ஈண்டு ஆராய்தற்குரிய பொருளாகும்.

திருப்பெருந்துறையில் இறைவன் அருட்குரவனுக எழுந்தருளி வந்து தம்மை ஆட்கொண்டருளிய அப் பொழுதே வாதவூரடிகள் தம்மையும் இவ்வுலகியல் வாழ்வை யும் அறவே மறந்து சித்தஞ் சிவமாகப் பெற்றுச் சீவன் முத்த ராயினர். இவ்வரலாற்று நுட்பம் அடிகளது வாய்மொழி யாகிய அகச்சான்று கொண்டே முன்னர் விளக்கப்பெற்றது. இங்ங்னம் அறிவாற் சிவனேயாகிய அடிகளது செயலே உலகர் நடைமுறையில் வைத்து ஆராயப் புகுவது சிற்றறி வும் சிறு தொழிலுமுடைய நம்மனுேர்க்கு ஒரு சிறிதும் ஏற் w سٹ > * er 登 9 羟乙 w புடையதன்ரும். தம்மை மறந்து இறைவனையே சிந்திக்கும் செம்மை மனமுடைய சிவஞானிகள் செயலை இறைவன் தன் செயலெனவே ஏன்று கொண்டருளு மியல்பினன் என்

பதும் அவ்வண்ணமே வாதவூரடிகள் செயலேயும் தன் செய

تم: قائية லாகக் கொண்டருளின னென்பதும்,

  • சித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும்

அத்தன் ' எனவரும் அடிகளது அநுபவ வுரையாலும் " மானிக்க வாசகர் அறிவாற் சிவனே யென்பது திண்ணம் ” எனவரும் சான்ருேர் வாய்மொழியாலும் நன்கு துணியப்படும். வாத வூரடிகள் செயலனைத்தையும் தவச் செயலெனவே கொண்டு அச்செயலால் வரும் இன்பத் துன்பங்களையும் இறைவன் தானே ஏன்று கொண்டருளிய எளிமைத்திறமே அடிகளது வரலாற்ருல் உலகத்தாருக்கு அறிவுறுத்தப்பெறும் சிறந்த

உண்மையாகும்.