பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/783

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பியாண்டார் நம்பி 67

போற்றிப் பரவுவதாய், வெண்பா, கட்டளைக் கலித்துறை யென்னும் இருவகைப் பாக்களால் அந்தாதித்தொடை பெறத்தொடுக்கப் பெற்றதாதலின் திருநாரையூர் விநாயகர் திருவிரட்டை மணிமாலை யென்னும் பெயர்த்தாயிற்று. திருநாரையூர்ப் பொல்லாப்பிள்ளையார் திருவருளால் இளம் பருவத்திலேயே செந்தமிழ்ப் புலமை வாய்க்கப்பெற்ற நம்பியாண்டார் நம்பி யென்பார் தாம்பெற்ற திருவருட் புலமையின் பயணுக முதன்முதற் பாடிய திருப்பாடல்,

என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்துத் தன்னை நினையத் தருகின்ருன்-புன்னே விரசு மகிழ் சோலை வியனுரை யூர் முக்கண் அரசு மகிழ் அத்திமுகத்தான். என்பதாகும். " புன்னை மரங்களும் மகிழ மரங்களும் அடர்ந்த சோலையாற் சூழப்பெற்ற திருநாரையூரிற்கோயில் கொண்டருளும் முக்கட்பெருமாளுகிய சிவபெருமான் மகிழும் மூத்தபிள்ளையாராகிய யானைமுகப் பெருமான், யான் அவனை நினைக்கும் ஆற்றல் பெருதமுன்னே என்மேல் வைத்த பெருங்கருணையால் என்னை நினைந்து ஆட்கொண்டு, அடியேனது பிறிவித் துயரைப்போக்கி இறைவனுகிய தன்னை இடைவிடாது நினைந்து பரவும் சிவஞானத்தை அடியேற்கு மேலும் மேலும் வழங்கியருள் கின் ருன் " என நம்பியாண்டார் நம்பிகள் தாம்பெற்ற திருவருளனுபவத்தை இத் திருப்பாடலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் கண் அரசு மகிழ் அத்தி முகத்தான்' என்ற தொடரில் அரசு, மகிழ், அத்தி என்ற சொற்கள் அவ்வப் பெயருடைய மரங்களையும் குறிப்பால் அறிவுறுத்தி நிற்றல் அறிந்து மகிழத்தக்கதாகும். இவ் வெண்பாவினல் தன்னைப் போற்றியதற்கு உளமிக மகிழ்ந்த விநாயகப்பெருமான், திருமாலின் தோற்றமெனப் போற்றப் பெறுந் திருவுடை மன்னனுகிய இராசராச அபயகுல சேகரனென்னும் சோழமன்னனுக்குத் தில்லையில் தேவாரத்திருமுறைகள் சேமிக்கப்பெற்றிருந்த செய்தி யினை யும் திருத்தொண்டத் தொகையிற் போற்றப்பெறும் அடியார்களது வரலாற்றினையும் தம் வாயிலாகப் புலப் படுத்தியருளிய உண்மை வரலாற்றினை,

யானேத் தியவெண்பா என்ன நினைந்தடிமை தானே சளுர்த்தன ற்கு நல்கினுன்-தேனே தொடுத்தபொழில் நாரையூர்ச் சூலம் வலன் ஏந்தி

டுத்த மதமுகத்த ஏறு.