பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/787

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பியாண்டார் நம்பி

தக்கது. தில்லைமன்னளுகிய சிவபெருமானைத் தம் சித்தகக் கோயிலில் இருத்தி வழிபடும் ஆகம சீலர்க்கன்றி நூல் களைக் கற்றும் கற்றவழியடங்கி நில்லாத வெறும் புத்தகப் பேய்களுக்கு அவன் டொன் னடி புலப்படுதலில் லை என நம்பியாண்டார் நம்பிகன் இந்நூலில் தெளிவாகக் குறிப் பிட்டுள்ளார்.

திருவாதவூரடிகளாகிய மாணிக்க வாசக சுவாமிகள் இறைவன் திருவடிக்கே பொருளமைத்து அகனைந்திணை யாகிய இன்பத்துறையிற் பாடிய திருச் சிற்றம்பலக் கோவை யாகிய செந்தமிழ்ப் பனுவல் உயர் வறவுயர்ந்த நலமுடைய தென்றும், அதன் பொருள் நலங்களைத் தெளிந்து கொள் ளும் வன்மை பெருத புலவர் சிலர் அகப்பொருட்டுறை யுமையத் தாமும் பல பாடல்களைப் பாடுதல் அறிஞரது நகைப்பிற்கு இ.ந்தருவதா மென்றும் விளக்குவதாக அமைந்தது,

வருவாசகத்தினின் முற்றுாை ந்தோனே வண்தில்லை மன்னத் திருவாதவூர்ச் சிவபாத்தியன் செய்திருச் சிற்றம் பலப் பொருளார்.தரு திருக் கோவை கண்டேயும் மற்றப்பொருளேத் தெருளாத வுள் ளத்தவர் கவிபாடிச் சிரிப்பிப்பரே.

என்ற பாடலாகும். திருச்சிற்றம்பலக்கோவையில் நம்பி யாண்டார் நம்பிகள் கொண்ட பெருமதிப்பு இச்செய்யுளால்

இனிது புலனுதல் காண்க.

பெரிய அன்பின் வரகுணதேவர் எனப் பட்டினத் தடிகளர்ற் போற்றப் பெற்ற வரகுண பாண்டியர் திரு நீற்றின் மேல் வைத்த உறைப்புடைய பேரன்பைப் புலப் படுத்தும் வரலாற்று நிகழ்ச்சியினை,

பொடியேர் தருமேனிய குகிப் பூசல்புகவடிக்கே கடிசேர் கணைகுளிப்பக்கண்டு கோயிற் கருவியில்லா அடியேபட வமையுங்கனையென்ற வரகுணன்றன் முடியே தருகழல் அம்பலத்தாடிதன் மொய்கழலே.

என வரும் பாடலில் நம்பியாண்டார் நம்பிகள் குறிப்பிட்டுப் போற்றினமை முன்னர் விளக்கப் பெற்றது.!

1. பன்னிரு திருமுறை வரலாறு, இரண்டாம் பகுதி பக்கம்- 98.