பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/788

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

772

பன்னிரு திருமுறை வரலாறு


(3) திருத்தொண்டர் திருவந்தாதி

திருவாரூர்ப் பெருமான் தில்லை வாழந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என அடியெடுத்துக் கொடுக்க தம்பியாரூரர் திருவாய் மலர்ந்தருளிய திருத்தொண்டத் தொகையென்னுந் திருப்பதிகத்திற் போற்றப் பெற்ற திருத்தொண்டர்களின் வரலாற்றைச் சுருக்கமாக வகுத்துக் கூறும் கருத்துடன் நம்பியாண்டார் நம்பி பாடிய பனுவல் திருத்தொண்டர் திருவந்தாதி யென்பதாகும். சோழ மன்னன் வேண்டிக் கொண்டபடி தில்லையில் தேவாரத் திருமுறையைக் கண்டு ஏழு திருமுறைகளாக வகுத்து உதவிய நம்பியாண்டார் நம்பி தமக்குப் பொல்லாப் பிள்ளையார் உபதேசித்தருளியபடி திருத்தொண்ட த் தொகையை முதனூலாகக் கொண்டு தனியடியார் அறு பதின்மரும் ஒன்பது திருக்கூட்டத்தாரும் ஆகிய திருத்தொண்டர்களுக்குரிய ஊர், நாடு, மரபு முதலியவற்றையும் அவர்கள் மேற்கொண் டொழுகிய திருத்தொண்டிள் நெறி யினையும் அதனல் அவர்கள் பெற்ற பேற்றினையும் வகுத்து விளக்கும் நிலையில் கலித்துறைத் திருவந்தாதியாகிய இப் பனுவலைப் பாடியருளினரென்பது,

ஆக்கியபின் திருத்தொண்டத் தொகையடைவை யருளாலே நோக்கியபின் நாயன்மார் நுட கடைவுந்-தொழிற்பேறும் பாக்கியத்தால் இடமுகந்தோன் அருள் செய்த பகுதியினுல் வாக்கியல்சேர் அந்தாதி நம்பி யடைவே வகுத்தார். எனவரும் திருமுறை கண்ட புராணச் செய்யுளாலும்,

பொன்னி வடிகரை சேர்நாரையூரிற் புழைக்கைமுக மன்னன் அறுபத்து மூவர் பதிதேம் மரபுசெயல் பன்ன அத் தொண்டத் தொகைவகை பல்கு மந்தாதி தன்னைச் சொன்ன மறைக்குல நம்பிபொற் பாதத்துணை துணையே.

গুঞ্জ ওয়া நம்பியாண்டார் நம்பிக்குரிய வணக்கமாக இத்திருவந் தாதியின் இறுதியிற் காணப்படும் பழம் பாடலினுலும் இனிது விளங்கும்.

நம்பியாரூரர் பாடிய திருத்தொண்டத் தொகையிற் போற்றப் பெற்ற அடியார்களின் வரலாறுகளை வகுத்துக் கூறுவது இத் திருவந்தாதியாதலின், இதனைத் திருத் தொண்டத் தொகைவகை யென வழங்குதல் உண்டென் பதும், முதனூலாகிய திருத்தொண்டத் தொகையையும்