பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/789

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பியாண்டார் நீக்பி 曾寶證

அதன் வகையாகிய இத்திருவந்தாதியையும் ஆதாரமாகக் கொண்டு இயற்றப் பெற்றது திருத்தொண்டர் புராணமா தலின் அதற்குத் திருத்தொண்டத் தொகைவிரி யென்ற தோர் பெயரும் உண்டென்பதும்,

அந்தமெய்ப் பதிகத் தடியார்களே

நந்தம் நாதனும் நம்பியாண்டார் நம்பி

புந்தியாரப் புகன்ற வகையிஞல்

வந்தவாறு வழாமல் இவம்புவாம்.

எனவும்,

தொன்று சீர்த் திருத் தொண்டத் தொகைவிரி

இன்றெதை வாலிங் கியம்புகேன் எனவும் வரும் சேக் கிழாரடிகள் வாய்மொழியால் உய்த் துணரப்படும்.

திருத்தொண் டத் தொகைத் திருப்பதிகத்தினை அடி யொற்றி அதன் கண் போற்றப்பெறும் அடியார்களின் வரலாறுகளை இத்திருவந்தாதி வகுத்துக் கூறுகின்றது. இதன் கண் எண்பத்தொன்பது கட்டளைக் கலித்துறைகள் உள்ளன. திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகத்தி லுள்ள பதிைெரு பாடல்களிலும் ஆரூரன் ஆரூரில் அம் மானுக்காளே யென நம்பியாரூரர் தம்மைத் தொண் டர்க்குத் தொண்டராகக் குறிப்பிடுகின் ருர். இப்பதினேரி டங்களிலும் சுந்தரர் வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறித்துப் போற்றும் பதிளுெரு பாடல்கள் இத் திருவந்தாதியில் முறையே அமைந்துள்ளன. திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சேரமான் பெருமாள், கோச் செங்கட் சோழர் ஆகிய பெருமக்களின் வரலாறுகள் இரண்டிரண்டு பாடல் களிலும், ஏனைப் பெருமக்களின் வரலாறுகள் ஒவ்வொரு பாடலிலும் குறித்துப் போற்றப்பெற்றன. திருத்தொண்டத் தொகையிற் போற்றப்பெறும் தனியடியார் தொகையடியார் இத்துணையரென்பதை ஒரு பாடலிலும், அத்திருப்பதிகத்தி லுள்ள பாடல்களின் முதற் குறிப்பினை ஒரு பாடலிலும் இத் திருவந்தாதியை ஒதுதலால் வரும் பயனை ஒரு பாடலிலும் கூறி நம்பியாண்டார் நம்பிகள் இத்திருவந்தாதியினை நிறைவு செய்துள்ளார். இதன் அமைப்பினைக் கூர்ந்து நோக்குங்கால் இத்திருவந்தாதி திருத் தொண்டத் தொகையின் விளக்கமாக இயற்றப்பெற்றதென்பது நன்கு