பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/791

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பியாண்டார் நம்பி ፳ግ5

நம்பியாண்டார் நம்பி சோழமன்னன் வேண்டுகோட் கிணங்கிப் பொல்லாப்பிள்ளையார் அறிவுறுத்தியபடி தில்லை யில் தேவாரத் திருமுறைகளைக்கண்டு வகைப்படுத்தித் திருத்தொண்டர் திருவந்தாதி யென்னும் பிரபந்தத்தைப் பாடுதற்கு முன்னரே ஆளுடையபிள்ளை யார் திருவந்தாதி' யெனவழங்கும் இப்பிரபந்தத்தைப் பாடித் திருஞானசம் பந்தப் பிள்ளையாரைச் சிறப்பு முறையிற் போற்றி வழி பட்டுள்ளார். இச்செய்தி,

பந்தார் விரலியர் வேள் செங்கட் சோழன் முருகன் நல்ல சந்தா ரகலத்து நீல நக்கன் பெயர் தான் மொழிந்து கொந்தார் சடையர் பதிகத்திலிட்டடி யேன் கொடுத்த அந்தாதி கொண்டபிரான் அருட்காழியர் கொற்றவனே.

எனவரும் திருத்தொண்டர் திருவந்தாதியாற் புலனும். காழியர்கொற்றவனுகிய திருஞானசம்பந்தப் பெருமான் கோச்செங்கட்சோழர், முருக நாயனுர், நீலநக்கர் ஆகிய மெய்யடியார்களின் திருப்பெயர்களேத் தான் இறைவனைப் போற்றிப் பரவிய திருப்பதிகங்களிலே யெடுத்துரைத்துப் போற்றி, அடியேன் பாடிய அந்தாதியாகிய பிரபந்தத்தினைத் தான் ஏற்றுக்கொண்டான் ' என்பது இத்திருப்பாடலின் பொருளாகும். எனவே நம்பியாண்டார் நம்பி திருத் தொண்டர் திருவந்தாதியைப் பாடுதற்குமுன் ஆளுடைய பிள்ளை யார் திருவந்தாதியினைப் பாடியுள்ள ரென்பது இனிது புலளுதல் காண்க. இத்திருவந்தாதியின் இறுதியில்

பாரகலத் துன்பங் கடந்தமர ராற்பணியும் ஏ சகலம் பெற்ருலும் இன்னுதால்-காகிலின் துாமங் கமழ்மாடத் தோணி புரத்த:ேன் நாமஞ் செவிக்கிசையா நாள்.

என்றதொரு வெண்பா அமைந்துள்ளது. துயரிலங்கும் இவ்வுலக வாழ்க்கையைத் துறந்து தேவர்களாற் போற்றப் பெறும் வானுலக வாழ்வினைப் பெற்ருலும் தோணிபுரத் தலைவராகிய திருஞானசம்பந்தப் பிளளேயாரது திருப் பெயரினைச் செவியாற் கேட்டு மகிழப் பெருதாரது வாழ் நாள் துன்ப நாட்களென்றும், அவரை ஏத்தும் நாட்கள் இன்ப நாட்களென்றும் கருதிய உறுதிப் பாடுடையவர் இந்நூலாசியரென்பது நன்கு பெறப்படும்.

வாழ்க்கைக்குத் துணைபுரியும் சுற்றத்தார்களும் அவர் துணை கொண்டு ஈட்டப்படும் பொருளும் அப்பொருளால்