பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/794

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

778

பன்னிரு திருமுறை வரலாறு


எனவரும் பாடலால் இத்திருவந்தாதியினைக் காதலாகி ஒதுவோர் பெறும் பேரின்பநிலையினை இனிது புலப்

படுத்தியுள்ளார்.

(5) ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்

சண்பையென்பது சீகாழிப்பதிக்குரிய பன்னிரண்டு திருப்பெயர்களுள் ஒன்று. ஆளுடையபிள்ளையார் பிறந் தருளிய சண்பையென்னும் தலத்தினைக் கட்டளைக்கலித் துறையாகிய திருவிருத்தத்தாற் போற்றுவது இப்பிரபந்த மாதலின் ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம் எனவழங்கப்பெறுவதாயிற்று. இதன்கண் பத்துப்பாடல்கள் உள்ளன. பதினுெராம் பாடலாக அமைந்த இதன இறுதிச்செய்யுள் மேற்கூறிய பத்துப்பாடல்களின் முதனினைப்புச் செய்யுளாகும்.

ஆளுடைய பின்ளேய:ர் இளம்பருவத்திலேயே உமையம்மையாரளித்த பாலடிசிலுண்டு சிவஞானம் பெற்றதும், தன் கணவன் பாம்புதீண்டியிறந்தமைகண்டு அல்லலுற்றழுத மங்கையொருத்தியின் வருத்தம் நீங்க விடந்தீர்த்ததிருப்பதிகத்தையருளியதும், பாலே நிலமாக உருத்திரிந்த திருநனிபள்ளியை நெய்தல் நிலமாக வளம் பொருந்தப்பாடியதும், ஆன்மாக்கள் பிறவித்துயர் நீங்கி இன்புறும் வண்ணம் வினையினைப் போக்கும் இறைவ னடிக்கே செந்தமிழ்ப்பாமாலைகளைப் புனைந்து போற்றியதும், திருமறைக்காட்டில் திருக்கதவம் அடைக்கப் பாடியருளிய தும், வையையாற்றில் எதிரேறிச் செல்லும்படி திருப்பதிகம் பாடி அமணர்களை வென்று அன்னேர்கழுவேறக்கண்டதும், நல்லூர்ப்பெருமணத்தில் வாழ்க்கைத் துணைவியொடும் இறைவனது ஈறில்பெருஞ் சோதியிற்புக்கு ஒன்றி யின் புற்றதும் ஆகிய செய்திகள் இப்பனுவலில் குறித்துப் போற்றப்பெற்றுள்ளன.

(8) ஆளுடைபிள்ளையார் திருமும்மணிக்கோவை

ஆளுடைபிள்ளையாரது திருப்புகழை விரித்துரைப்ப தாகிய இப்பனுவல், அகவல், வெண்பா, கட்டளைக் கலித்துறையாகிய மூவகைப் பாக்களால் இயன்று மூவகை மணிகளாலாகிய அழகிய மணிவடம் போன்று திகழ்வு