பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/795

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பியாண்டார் நம்பி ፮ገ(፪

தாகலின் ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை யென்னும் பெயர்த்தாயிற்று. இதன் கண் முப்பது பாடல்கள் உள்ளன. ஆளுடைபிள்ளையாரது வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறித்துப் போற்றும் பாடல்களும், அவர் திருவாய் மலர்ந் தருளிய செந்தமிழ்ப் பதிகங்களின் சிறப்பினை விரித்து உரைக்கும் பாடல்களும், பிள்ளையாரைக் காதலித்த தலைமகளது துயர்கிளந்துரைக்கும் அகத்துறைப் பாடல் களும், அவரைப் பாட்டுடைத் தலைவராகக்கொண்டமைந்த அகத்துறைப் பாடல்களும் இம் மும்மணிக்கோவையில் இடம் பெற்றுள்ளன.

திருஞானசம்பந்தப் பிள்ளையார் சிவனருளால் இவ் வுலகிற் செய்தருளிய அற்புத நிகழ்ச்சிகள் பலவற்றைத் தொகுத்துரைத்துப் போற்றுவது, அடுசினக் கடகரி யதுபட வுரித்த படர் சடைக் கடவுள் தன் திருவருளதனு ற் பிறந்தது கழுமலமென் னுங் கடிநகரதுவே, வளர்ந்தது தேங்கமழ் வாவிச் சிலம்பரையன் பெறு பூங்குழல் மாதிடுபோனகம் உண்டே, பெற்றது குழகனைப் பாடிக் கோலக்காப்புக் கழகுடைச் செம்பொற் ருளமவையே, தீர்த்தது தrதமர் மருகற் சடையனைப் பாடிப் பேதுறுபெண்ணின் கணவனேவிடமே, அடைத்தது அரைசோ டிசையா அணிமறைக் காட்டுக் கு ைசசேர் குடுமிக் கொழுமணிக்கதவே, ஏறிற்று அத்தியும் மாவும் தவிர அரத் துறை முத்தின் சிவிகை முன் ஒட்பெற்றே, பாடிற்று அருமறை ஒத்துர் ஆண்பனை யதனைப் பெருநிதம் எய்தும் பெண் புனே யாவே. கொண்டது பூவிடு மதுவிற் பொறிவண் டுழலும் ஆவடு துறையிற் பொன்னு யிசமே, கண்டது உறியொடு பீலி ஒருகையிற் கொள்ளும் பறிதலைச் சமனப் பல்கழு மிசையே, நீத்தது அழ்ேச்சுவை யேயறிந் தரனடி பரவுந் தமிழ்ச்சுவை யறியாத் தம்பங்களையே நினைந்தது அள்ள ற் பழனக் கொள்ளம் புதுரர் இக்கரை ஓடம் அக் கரைச்செலவே, மிக்கவர் ஊனசம்பந்தம் அறுத்துயக் கொள வல ஞானசம்பந்தன் இஞ்ஞா லத்திடையே.

எனவரும் இம் மும்மணிக்கோவைப் பாடலாகும். எண்ணி லாத ஆன்மாக்களின் ஊனசம்பந்தமாகிய பிறவிப்