பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/796

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

臀0 புன்னிரு திருமுறை ஒரலாறு

பிணியைப்போக்கி உய்வித்தருளவல்ல திருஞானசம்பந்தப் பெருமான் சிவனருளால் இவ்வுலகில் திருவவதாரஞ் செய் தருளிய திருத்தலம் திருக்கழுமலம், அவர் வளர்ந்தது, மலையரையன் மகளார் உமாதேவியாரளித்த ஞானப்பால் அடிசிலை உணவாகக்கொண்டு. அவர் இறைவனைப் பாடிப் பெற்றது, திருக்கோலக்காவில் செம்பொன்னலாகிய தாளத்தின. அவர் தீர்த்தது. திருமருகலில் வருத்தமுற்ற பெண்ணுெருத்தியின் துயர்க்கிரங்கி அவள் கணவனது விடத்தினை. அவர் அடைத்தது, திருநாவுக்கரசரொடுகூடித் திருமறைக்காட்டில் திருக்கதவின. அவர் ஊர்தியாகக் கொண்டேறியது, யானையுங் குதிரையுமன்றித் திருவரத் துறையண்ணல்பால் முன்ள்ைபெற்ற முத்துச்சிவிகையின. அவர் பாடியது, திருவோத்துளரில் ஆண்பனை பெண்பனை ஆக, அவர் பெற்றுக்கொண்டது, திருவாவடுதுறையில் ஆயிரம்பொன்னிறைந்த பொற்கிழியின. அவர் கண்டது, உறியையும் பீலியையும் கையிற்கொண்ட சமணர்கள் கழுவேறிய துன்பக்காட்சியின. அவர் விடுத்து நீங்கியது, உணவின் சுவையொன்றையே யறிந்து அவ்வளவில் அமைந்து சிவனடி.பரவும் செந்தமிழ்ப் பாடல்களின் சுவை நலத்தினைச் சிறிதும் உணரப்பெரு தம்பம் போன்ற மடவோரை. அவர் திருவுள்ளத்தில் நினைத்தருளியது, திருக்கொள்ளம்பூதூரில் ஆற்றின் இக்கரையிலே நின்ற ஒடம் அக்கரையிலே சென்று சேர்தலை' என்பது இதன் பொருள். இதன் கண் அவிழ்ச்சுவையே யறிந்து அரனடி பரவுத் தமிழ்ச் சுவையறியாத் தம்பங்கள் ' என்றது, இறைவனது பொருள் சேர் புகழினை விரித்துரைக்கும் செந் தமிழ்ப் பாடலின் சுவைநலத்தினை யறிந்துமகிழும் மதுகை யின்றித் தம் வயிருகிய துாராக்குழியைத் தூர்த்தற் பொருட்டு உணவின் சுவையொன்றினையே விரும்பிவாழும் வாயுணர்வின் மாக்களே. செவியிற் சுவையுனரா வாயுணர்வின் மாக்கள், அவியினும் வாழினும் என் எனத் திருவள்ளுவர் கூறிய வாய்மொழி ஈண்டு நினைக்கத்தக்கது. பிணம்போல்வாராகிய இம்மாக்களது கூட்டுறவு அறி யாமையை விளைவிப்பதாதல் உணர்ந்து ஆளுடை பிள்ளையார் இத்தகைய மாக்களை விலக்கியொழுகினர் என்பது, நீத்தது, அவிழ்ச்சுவையேயறிந்து அரண்டி பரவுத் தமிழ்ச்சுவையறியாத்தம்பங்களையே என வரும் இத் தொடரால் நன்கு புலகுைம்,