பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/797

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பியாண்டார் நம்பி 78;

திருஞானசம்பந்தப் பெருமான் திருவாய் மலர்ந் தருளிய தேவாரப் பதிகங்களாகிய ஞானத் தமிழ், பிறவி யாகிய பெருங்கடலே நீந்திக் கடக்குங்கால் உள்ளே நீர் கசிந்து அமிழாதபடி தோலாற் பொதிந்து அமைக்கப்பட்ட அழகிய தோணி போல் நின்று உதவும் என்பதனை,

பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத் துறவியெனுந் தோற்ருேனி கண்டீர் நிறையுலகிற் பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தகன் தன் மாலை ஞானத் தமிழ், என்றபாடலால் அறிவுறுத்துவர் ஆசிரியர். உலகில் தீமை யெல்லாம் நீங்கத் திருவவதாரஞ் செய்தருளிய சைவசிகா மணியாகிய திருஞானசம்பந்தப் பெருமான் திருவடிகள், எக்காலத்தும் அடியார்கள் உள்ளத்தே அகலாதிருந்து இன் பஞ் செய்தும், இவ்வுலகில் வாழும் மக்கள் நல்லமலர்களைக் கொண்டு அருச்சித்து வழிபடும் நிலையில் வெளிப்பட்டும். நன்மை நிறைந்த கல்விக்கழகத்தே அன்பினுல் அள வளாவி மகிழும் புலவர்கள் பாடும் செய்யுட்களுக்கு ஏற்ற உரிமையுடையனவாகவும் விளங்குமியல்பினை,

என்றும் அடியவர் உள்ளத் திருப்பன இவ்வுலகோர் நன்று மலர் கொடு துவித் துதிப்பன நல்ல சங்கத் தொன்றும் புலவர்கள் யாப்புக்குரியன ஒண்கலியைப் பொன்றுங் கவுணியன் சைவ சிகாமணி பொன் னடியே. என்ற பாடலால் நம்பியாண்டார் நம்பி விரித்துரைத்துப் போற்றியுள்ளார்.

திருஞானசம்பந்தப் பெருமானது பேரழகில் ஈடுபட்டு அப்பெருமானையணையப்பெருது வருந்தும் தன் மகளது ஆற்ருமைகண் டு வருந்திய நற்ருய், ஞானசம்பந்தப்பெரு மானை யடைந்து தன் மகளது பேதுறவைத் தீர்த்தருளும்படி வேண்டுவதாக அமைந்தது,

தனமலி கமலத் திருவெதுஞ் செல்வி விருப்பொடு திளைக்கும் வீயா இன்பத் தாடக மாடம் நீடுதென் புகலிக் காமரு கவிஞர் கவுணியர் தலைவி பொற்பமர் தோள நற்றமிழ் விரக் மலைமகள் புதல்வ கலே பயில் தாவ, நிகுது பொங்கொளிமார்பில் தங்கிய திருநீறு ஆதரித் திறைஞ்சிய பேதையர் கையில், வெள்வளை வாங்கிச் செம்பொன் கொடுத்தலிற் பிள்ளையாவது தெரிந்தது பிறர்க்கே. -