பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#

is;

நாடு நலம்பெற ஞானமுண்டாக்கும் பூநீலபூதி காசிவாசி அருள்நந்தித் தம் பிரான் சுவாமிகளின் பொன்ஞர் திருவடிகளை வணங்கித் தண்ணுர் தமிழ் வளர்க்கும் அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தின் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழாராய்ச்சித் துறையின் சார்பில் இத்தகைய தமிழ்ப் பணிகள் பல தொடர்ந்து நிகழும் வண்ணம் ஊக்கமும் ஆக்கமும் உதவி என்னை அன்புடன் ஆதரித்துவரும் அண்ணுமலைப் பல்கலைக் கழக இணைவேந்தர் செட்டிநாட்டரசர் ராஜாசர் டாக்டர் M. A. முத்தையா செட்டியார் B.A L.L.D. அவர்களுக்கு என் உள மார்ந்த நன்றியும் வணக்கமும் என்றும் உரியனவாகும்.

இத்திருமுறையாராய்ச்சிப் பணி இனிது நிறைவேற ஆவன புரிந்துதவிய பல்கலைக் கழகத்தின் முன்னுள் துணை வேந்தர் செந்தமிழ்ப் பேரன்பர் திருவாளர். தி. மூ நாராயணசாமி பின்னே, எம்.ஏ. பி.எல். அவர்களுக்கும், பல்கலைக் கழகத்தின் இப்போதைய துணைவேந்தர் பேராசிரியர் திரு. S. P. ஆதி நாராயண் அவர் களுக்கும், தமிழாராய்ச்சித் துறைத் த லேவர் வித்துவான் திரு. கோ. சுப்பிரமணிய பிள்ளை M.A., B.L. அவர்களுக்கும் எனது உள மார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். திருமுறை வரலாற்றின் முதற் பகுதியினேப் பாராட்டி அரியதொரு முகவுரை எழுதியுதவிய முன் ளுள் துணைவேந்தர் வே. சுப்பிரமணிய நாடாள் அவர்களின் தமிழார்வத்தினை தெஞ்சார நினைந்து போற்து கின்றேன்.

இந்நூல் அச்சாகுங்கால் எனது பணிக்கு அன்புடன் உதவி புரிந்து இதனை வனப்புற அச்சிட்டுக் கொடுத்துதவிய திருச்சிராப்பள்ளி, கீதா பிரஸ் உரிமையாளர் திரு. மணி ஐயர் அவர்களுக்கும் அவர்கள் துணை வர்களுக்கும் எனது நன்றியுரிய தாகும.

க. வெள்ளைவாரணன்,