பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

பன்னிரு திருமுறை வரலாறு


அமைச்சராகிய வாதவூரர், குதிரை வாங்குதற்கென்று பாண்டியன்பால் நிறைந்த பொன்னைப் பெற்றுச் சென்றமை யும், திருப்பெருந்துறையில் இறைவனே குருவாக வந்து அவரை ஆண்டுகொண்டருளிய நிலையில் அவர் கொண்டு வந்த பொன்னனைத்தும் செலவழிந்து போகவே அப் பொன்னுக்குரிய குதிரைகளை வாங்கி மன்னனிடம் கொடுத் தற் இயலாது வருந்திய அடிகள் தமது பாரமனைத்தையும் இறைவன்பால் ஒப்புவித்து அவனது அருள் வழி யடங்கி எத்தகைய இடையூறுகளையும் பொருட்படுத்தாது ஒழுகின மையும், சித்தஞ்சிவமாகப் பெற்ற அடிகளது துயரைப் போக்கத் திருவுளங்கொண்டு சிவபெருமானே குதிரைச் சேவகளுக வந்து தோன்றினமையும் ஆகிய இவ்வரலாற்று நிகழ்ச்சிகள் மேற்காட்டிய திருவாசகத் தொடராகிய அகச் சான்றினுல் நன்கு வலியுறுதல் அறிந்து மகிழத்தக்கதாகும்.

திருவாதவூரர் குதிரை வாங்குதற்கெனக் கொண்டு சென்ற பொன் எல்லாவற்றையும் திருப்பெருந்துறையிற் செலவிட்டமையறிந்து சினமுற்ற பாண்டியன் வாதவூரடி களைச் சிறையில் வைக்கும்படி கட்டளையிட அரசனுடைய ஏவலர் அடிகளைச் சிறைப்படுத்தினரெனவும், சிறையில் துய குறும் அடிகள் தம்மை ஆண்டருளிய இறைவனை யெண்ணி அழுதரற்றிக் குழைத்தபத்து, அருட்பத்து ஆகிய பனுவல் களைப் பாடிப் பரவிஞரெனவும் பெரும்பற்றப்புலியூர் நம்பி கூறுவர். நம்பி கூறும் இக்கருத்து,

" அன்றே யென்றன் ஆவியும்

உடலும் உடைமை யெல்லாமுங் குன்றே யனையாய் என்னை ஆட்

கொண்டபோதே கொண்டிலேயோ இன்ருே ரிடையூ றெனக்குண்டோ

எண் தோள்முக்கண் எம்மானே நன்றே செய்வாய் பிழை செய்வாய்

நானே இதற்கு நாயகமே "

  • நீதியே செல்வத் திருப்பெருந்துறையில் நிறைமலர்க்குருந்த மேவியசீர் ஆதியே யடியேன் ஆதரித்தழைத்தால்

அதெந்துவே யென்றருளாயே "

என வரும் அடிகளது திருப்பாடற் குறிப்புக்களுக்கு ஒத்த வகையில் அமைந்திருத்தல் அறியத் தக்கதாகும்.