பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/800

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీక్ష டின்னிரு தீருமுறை சைன்து

எழில் நலங்களும், அந்நகரத்தே பிறந்து நான்கு மறை களையும் பல கலைகளையும் கற்றுணர்ந்து நான்முகன யொத்த பெருஞ் சிறப்புடையராய் நன்னெறியிலொழுகும் நானூற்றுவராகிய மறையவர்களின் மாண்பும், பன்னிரண்டு திருப்பெயர்களையுடைய காழிப்பதியிலே கவுணியர் குலத் தில் தோன்றிய ஆளுடைய பிள்ளையார் சிவபெருமா னருளால் அழகிய பொற் கிண்ணத்திலே உமையம்மையார் அளித்த ஞானவார முதத்தைப் பருகித் திருஞானசம்பந்தர் என்னும் திருப்பெயர் பெற்றுத் திருநெறிய தமிழாகிய இன்னிசைத் திருப்பதிகங்களால் உமையொரு பாகத்து அண்ணலைப் பாடிப் போற்றிப் பல அற்புதங்களை நிகழ்த்தி மதுரையிற் சமணரை வாதில் வென்று சிவநெறி பரப்பிய சீர்த்தியும் இத்திருவுலா மாலேயின் முற்பகுதியிலே சுவை பெற விரித்துரைக்கப் பெற்றன.

நான்மறைவல்ல வேதியர்களும் நாற்பத் தெண்ணுயிர முனிவர்களும் புடை சூழ்ந்து போற்றத் திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருவோலக்கத்தில் எழுந்தருளியிருத்தலும், அத் திருவோலக்கத்திற் புகுந்து ஆளுடைய பிள்ளை யாரைச் சேவித்து மகிழ்ந்த புகலி நகரத்துப் பூசுரர்கள் தாம் கண்ட அவ்வழகிய காட்சியைத் தம் நகர மக்கள் அனைவரும் காண வேண்டுமென்னும் பெருவேட்கையு.ை யராய்ப் பிள்ளே யாரைப் பணிந்து சீகாழிப்பதியின் வீதியிலே திருவுலாப் போந்து எங்களுக்குக் காட்சி தந்தருளல் வேண்டும்' என விண்ணப்பஞ் செய்தலும், அவர்களது வேண்டுகோட்கு இசைந்த ஆளுடைய பிள்ளையார் மன்னவர் திருவும் தங்கள் வைதிகத்திருவும் விளங்கச் சிறந்த அணிகலன்களை யணிந்தருளிச் சிறுத் தொண்டர் முதலிய நண்பு மிக்க அடியார்கள் உடன் வரப் பல இன்னியங்கள் முழங்க யானை மீதமர்ந்து சீகாழிப் பதியின் திருவீதியிலே திருவுலாப் போந்தருளுதலும், பேதை முதல் பேரிளம் பெண் ஈருகவுள்ள ஏழு பருவத்து மகளிரும் அத்திருவுலாவில் ஆளுடைய பிள்ளையாரைக் கண்டு கைதொழுது தம் கைவளைகள் கழல நாணிழந்து மெய் சோர்ந்து தமக்குட் பலவாருகப் பேசி மையலுற்று வருந்துதலும் ஆகிய செய்திகள் இத்திருவுலா மாலையின் பிற்பகுதியிற் கூறப்பெற்றுள்ளன.