பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/805

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பியாண்டார் நம்பி 警盛褒

மணங்காணவந்த எல்லா மக்களோடும் ஈறில்பெருஞ் சோதியிற்புகுந்து அந்தமிலின்பத்தமர்ந்தது வரையுள்ள எல்லாச் செய்திகளையும் படிப்போருளமுருக இத்திருத் தொகையில் நம்பியாண்டார் நம்பி எடுத்து உரைத்துப் போற்றியுள்ளார்.

(10) திருநாவுக்கரசு தேவர் திருவேகாதசமாலை

வித்தகப்பாடல் முத்திறத்து அடியரும் ' எனப் போற்றப்பெற்ற தேவார ஆசிரியர்கள் மூவருள் திருஞான சம்பந்தப் பிள்ளையாரைத் திருவந்தாதி, திருச்சண்பை விருத்தம், திருமும்மணிக்கோவை, திருவுலாமாலை, திருக் கலம்பகம், திருத்தொகையென மேற்காட்டிய ஆறுபிரபந் தங்தங்களாற் போற்றிப் பரவிய நம்பியாண்டார் நம்பிகள் இங்ங்னமே திருநாவுக்கரசர் நம்பியாரூரர் ஆகிய இருபெரு மக்களைக் குறித்தும் தனிப்பிரபந்தங்கள் பலவற்றைப் பாடியிருத்தல் கூடும். நம்பியாரூரைப் போற்றிய தனிப் பிரபந்தமெதுவும் கிடைக்கவில்லை. திருநாவுக்கரசடி களாரது சிறப்பினை விரித்துரைப்பதாகத் திருநாவுக்கரசு தேவர் திருவேகாதசமாலை யென்ற பிரபந்தமொன்றே இப்பொழுது கிடைத்துளது. பதினுேராந்திருமுறையின் இறுதிக்கண் அமைந்த பிரபந்தமாகத் திகழ்வது இத்திரு ஏகாதசமாலையே யாகும். ஏகாதசம் - பதினென்று. திரு நாவுக்கரசரைப் போற்றிப் பரவும் பதிைெரு பாடல்களை யுடைய செந்தமிழ்மாலையாக விளங்குவது இப்பிரபந்த மாதலின் இது திருநாவுக்கரசு தேவர் திருவேகாதசமாலை யென வழங்கப்பெறுவதாயிற்று. இதன்கண் அமைந்த பாடல்கள் பதினென்ருயினும் திருநாவுக்கரசரது வரலாற்றி லமைந்த சிறந்த உண்மைகளும், அப்பெருந்தகை யாரை வழிபடுவதஞலுளவாம் பெருநலங்களும், அரசர் திருவாய்மலர்ந்தருளிய திருப்பதிகங்களின் சிறப்பும், இப்பாடல்களில் தெளிவாக அறிவுறுத்தப் பெற்றுள்ளன.

"ஐம்புலன்களின் வழியே அலைந்து திரியும் மனமுடைய மாந்தர் செய்யும் குற்றங்களை நீக்கியருளுந் தூய பேரன் போடு தம் தமக்கையாராகிய திலகவதியாரைப் பணிந்து அவர் திருவைந்தெழுத்தோதிக் கொடுத்த திருவெண் ணிற்றினையணிந்து சூலைநோய் நீங்கப்பெற்று அமண் சமயத் தொடர்பகற்றிய உறுதிப்பாட்டுடன் இறைவனது