பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/806

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

790

பன்னிரு திருமுறை வரலாறு


திருவருட் பெருவெள்ளத்திலே திளைத்த தவப்பெருஞ் செல்வர் திருநாவுக்கரசடிகளாவர். மெய்ப்பொருளைப் போற்றிய திருப்பாடல்களில் உலகினரது பாசம் நீங்குதற் குரிய பேருண்மைகளை வெளியிட்டருளிய அப்பெருந் தகையார் அளவிலா ஞானப்பெருங்கடலிடையே திகழும் பேரமிழ்தமாகிய சிவப்பேரொளியிற் புகுந்தின் புறும் பெரு வாழ்வினை அடியேங்களுக்கு வழங்கியருளினர்.

திருநாவுக்கரசர்க்குத் தொண்டுபட்ட மெய்யடியார்கள், தெளிந்த தேன் போலும் இனிமை வாய்ந்த மொழி களைப் பேசவல்ல ஊர்வசி முதலிய வானுலக மாதர் பாடி யாடித் தம்மை வசப்படுத்தற் பொருட்டுக் கூறிய நயவுரை களைத் துகளெனவொதுக்கி, ஞானத்திரளாய் நின்ற புகலூர்ப்பெருமான நினைந்து கெஞ்ச நெக்குருகக் கண் aர் ததும்ப உழவாரப் படையால் திருக்கோயிற் பணி புரிந்த அப்பெருந்தகையார் திருவாய் மலர்ந்தருளிய திருப் பதிகங்களை அருட்குருவின் உபதேச மொழிகளாகக் கொண்டு, சிவபெருமான் திருவடிகளைச் சென்னியிற் சூடிப் பேரின்ப வாழ்வில் திளைத்து மகிழ்வார்கள்; துன் பத்திற்குக் காரணமாகிய பிறவிச் சூழலிற் புகுவாரல்லர். திருநாவுக் கரசரை நினைந்து போற்றுதலே பிறவிப் பிணியைப் போக் குதற்குரிய அருமருந்தாகும்.

அன்புருவாகிய திருநாவுக்கரசர்பாற் பற்றுடையராய் நறுமலர்களால் அருச்சனை புரிந்து வழிபடாதவர் நிலையாத யாக்கையினை நிலையென நம்பி வயிற்றுக்கு இரை தேடி யுழலும் பித்தராவர்.

சிவபூசை கற்ற தூயபேரறிவினையுடையராய் இவ்வுல கிலேயே வீடுபேற்றின் பினை நுகர்ந்த திருநாவுக்கரசர், பிறவியாகிய பெருங்கடலிலே நெல் லாகிய உணவின் துணை கொண்டு மிதந்துழலாமல் திருவைந்தெழுத்தினை யோதிக் கல்லே தெப்பமாகக் கொண்டு கரையேறிய வித்தகர். அவர் திருவாய் மலர்ந்தருளிய தமிழ் மாலை யாகிய திருப்பதிகங்கள் உலகத்தார்க்குப் பெருநிதியமாகப் பயன் தருவன.

பதிகம் ஏழெழு நூறு பகரும் மா கவியோகி யாகிய நாவரசருடைய திருவடிகளைத் தலைமேற் கொண்டு வழிபடு வோர், செல்வம், புகழ், மெய்ந்நெறி, வினை நீங்கிய