பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/807

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பியாண்டிார்நம்பி 鷺

தூய்மை, மெய்ஞ்ஞானம், சிவனடித் தொண்டு, துறக்க வாழ்வு, தலையாய மனிதர்க்குரிய சால்பு ஆகிய எல்லா நலங்களையும் பெற்றின்புறுவர் என்னைக் குடிமுழுதுய்யக் கொண்ட திருநாவுக்கரசடிகளின் திருவடிமலர்கள், சார்ந்த அடியார்களின் இடர்களை யகற்றுவன : களங்கமற்ற, நிறை மதிகள் பத்துக் கூடி நிலவெறித்தாற் போன்று தண் ளுெளி பரப்புவன தூய்மையேயுருவாகத் திகழ்வன : தவமுனிவர்கள் தொழுது போற்றுவன; குற்றமற்ற பெருங் குணங்களுக்கு நிலைக்களமாகத் திகழ்வன.

தேவர்க்கும் அரிதாகிய சிவலோகக்கதி திருநாவுக் கரசரருளால் அடிநாயாகிய எளியேற்கு எளிதிற் கைவத் தது. திருநீற்றுக் கவசமணிந்து சிவனடியே சிந்திக்கும் மனமுடையராய்ச் சமணர்கள் அமைத்த நீற்றறையிலே தங்கிக் கந்தைமிகையாங் கருத்துடையராய் விளங்கிய புலமைச் செல்வராகிய திருநாவுக்கரசர், வஞ்சனையின்றித் தம்மை வழிபடும் அடியார்களுக்குப் பசுபந்தத்தினை நீக்கும் பரிசினைப் பணித்தருள் புரியும் பேரருளாளராவர். அப் பெருந்தகையார்தம் இணையடித் தாமரைகளைப் பேரன்பு டன் தலைமேற் கொண்டு உய்வதன்றி வேருெரு சாதனமுங் கண்டிலோம். மற்றுள்ளன எவையும் வேண்டோம். ஆதலால் ஐம்புலன்களின் வழியே சென்று இறப்பார் செல்லும் தீய வழிகளிற் செல்ல மாட்டோம் ”.

என நம்பியாண்டார் நம்பிகள் இத்திரு ஏகாதசமாலை யில் திருநாவுக்கரசு தேவரை உளங்கசிந்து போற்றியுன் வாார்.

அப்பரடிகளுக்குத் திருவதிகையிறைவர் அளித்தருளிய திருநாவுக்கரசு என்ற திருப்பெயரின் சிறப்பினை,

இலைமா டென்றிடர் பரியார், இந்திர

னேயொத் துறு குறை வற்ருலும் நிலையா திச் செல்வ மெனவே கருதுவர், நீள் சன்மக்கட லிடையிற் புக் கலையார், சென்றரன் நெறியா குங்கரை

அண்ணப் பெறுவர்கள், வண்ணத்திண் சிலை மாடந்திகழ் புகழா முருறை

திருநாவுக்கர சென் போரே. எனவரும் திருப்பாடல் இனிது விளக்குவதாகும். " நிறத் தீற்றிய திண்மை மிக்க மலைபோன்று மானிகைகன