பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/808

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

792

பன்னிரு திருமுறை வரலாறு


உயர்ந்து விளங்கும் புகழ்மிக்க திருவாமூரிற் பிறந்தருளிய பெருமான் திருநாவுக்கரசு என அப்பெருந்தகையாரது திருப்பெயரை அன்பினுல் ஒதுவார், நம்மிடத்துச் செல்வ மில்லையே யென இடருற்று வருந்தார் ; வானுலக வேந்தனுகிய இந்திரனைப் போன்று குறைவின்றி நிரம்பிய செல்வமுடையவராகத் தாம் இருந்தாலும் தம்மிடத்துள்ள செல்வம் நிலையாதெனக் கருதும் மெய்யுணர்வையே கொண்டு திகழ்வார்கள் ; பிறவியாகிய பெருங்கடலுள் வீழ்ந்து துன்புற மாட்டார்கள் ; பிறவித் துன்பத்தினின் றும் நீங்கிச் சிவனது திருவருள் நெறியாகிய இன் பக்கரை யினையடைந்து மகிழ்வார்கள் என்பது இத்திருப்பாடலின் பொருளாகும். இதன் க ண் திருநாவுக்கரசர்க்குத் தொண்டு பூண்ட அடியார்களின் இயல்பாகச் சொல்லப் பெற்றன யாவும் நாவரசரைத் தெய்வமாகக்கொண்டு போற்றிய அப்பூதியடிகளின் பெருமையினை நினைவு படுத்துவனவாக அமைந்துள்ளன. இந்நுட்பத்தினை உளங்கொண்ட துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் தாம்பாடிய நால்வர் நான்மணிமாலையில்,

உற்ருனலன் தவம், தீயில் நின்ருனலன் ஊண்புனலா அற்ருனலன் நுகர்வும் திருதாவுக் கரசெனுமோர் சொற்ரு னெழுதியுங் கூறியுமே யென்றுந்துன்பில்பதம் பெற்ருன் ஒரு நம்பி அப்பூதியென்னும் பெருந்தகையே.

என அப்பூதியடிகளாரை உளமுருகிப் போற்று முகமாகத் திருநாவுக்கரசு என்னும் திருப்பெயரின் மாண்பினை விளக்கிய திறம் இங்கு ஒப்புநோக்கியுணரத்தகுவதாகும்.