பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/810

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

794

பன்னிரு திருமுறை வரலாறு


அமைச்சராக நியமித்து அவருக்கு உத்தம சோழப் பல்லவன் என்ற பட்டத்தையுந் தந்து சிறப்பித்தான். அமைச் சுரிமை பூண்டு சோழ நாட்டில் தங்கிய அருண்மொழித் தேவர், அந்நாட்டுத் திருத்தலங்களுள் ஒன்ருகிய திரு நாகேச்சரத்திற் கோயில் கொண்டருளிய இறைவன்பால் பேரன்பு நிறைந்தவராய் மாநாகம் அருச் சித்த மலர்க்கமலத் தாள்வணங்கி நாடோறும் போற்றி வழிபட்டு வந்தார். நாகேச்சரத்திறைவர்பால் வைத்த அளவிலாப் பேரன் பினல் சோழநாட்டுத் திரு நாகேச்சரத் திருக்கோயிலைப் போன்ற அமைப்பிலேயே தம்முடைய ஊராகிய குன்றத்தூரிலும் திருநாகேச்சரம் என்ற பெய ரால் ஒரு திருக்கோயிலைக் கட்டி அங்கு நாள் வழிபாடும் திருவிழாக்களும் நடைபெற ஏற்பாடு செய்தார்.

அந்நாளில் சைவ சமயத்தார் பலர் மெய்ந்நூலாகிய தங்கள் சைவ நூல்களின் பெருமையினை யுணராது சமணர்கள் புனைந்துரைத்த சீவகசிந்தாமணிக் கதையை மெய்யென நம்பி அக்காவியச் சுவையில் ஈடுபட்டுத் தம் சமய பெரியோர்களின் வரலாறுகளை மறந்தனர். சோழ மன்னனும் சீவகசிந்தாமணிக் கதையை மெய்யென நம்பி மனமகிழ்ந்து பாராட்டிக் கேட்பானுயினன். அதுகண்ட அருண்மொழித் தேவராகிய சேக்கிழார், அரசனை நோக்கி வேந்தர் பெருமானே நீவிர் சைவ சமயத்தினராயிருந்தும் இம்மை மறுமை வீடென்னும் மும்மை நலங்களையுந் தரும் சிவனடியார்களின் மெய்ம்மை வரலாறுகளைக் கேளாது நமது முழுமுதற் பொருளாகிய சிவபெருமான நிந்திக்கும் புறச்சமயத்தவர்களாகிய சமணர்களுடைய பொய்க் கதை யாகிய இதனை மெய்யென நம் புதல் தகுதியன்று என அறிவுறுத்தினர். இதனைக் கேட்ட சோழ மன்னன் நீவிர் சொல்லிய சிவகதை யாது? அதன் வரலாறென்ன? அதனை விளங்கச் சொல்வீராக என வினவினன். அது கேட்ட சேக்கிழார் பெருமான், திருவாரூரிலே கோயில் கொண்டருளிய தியாகேசப் பெருமான் தம்முடைய அடியார் களின் பெருமையை விரித்துரைத்துப் பாடிப் போற்றுக என்று கூறித் தில்லைவாழந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என அடியெடுத்துக் கொடுக்க நம்பியாரூராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகளால் திருவாய் மலர்ந்தருளப் பெற்றது திருத்தொண்டத் தொகையென்னுந் திருப்பதிக