பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/815

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் நாயளுள் வரலாறு జ్ఞ

இக்கூற்று பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை. சேக்கிழார் சீவகசிந்தாமணிக் கதையை மெய்யென நம்பு தல் கூடாதென விலக்கியதாக இந்நூல் கூறுகிறதே தவிர அதன் கண் அமைந்த காவியச் சுவை நலங்களை இழித் துரைத்ததாகக் கூறவில்லை. 'பொய் தருமாலுள்ளத்துப் புன் சமணர்" எனவும் பொய்மைச் சமயம் எனவும் சமணர் களையும் அவர் தம் சமயநூல்களையும் இழித்துரைக்கும் குறிப்புக்கள் பெரிய புராணத்திற் காணப்படுகின்றன. இக் குறிப்பினையுற்று நோக்குவோர், சமணசமயத்தார் புனைந்து ரைத்த கதைகளைப் படித்துப் பொழுதுபோக்குஞ் செயலைச் சேக்கிழார் வெறுத்துரைக்கும் உள்ளமுடையவரென்பதனை நன்குனர்வார்கள். ஆகவே சீவகசிந்தாமணிக் கதையைப் படித்து அக்கதையினை மெய்யெனக் கருதிப் பொழுது போக்கிய மக்களைத் திருத்துதற்குச் சேக்கிழார் முயன்ருச் எனச் சேக்கிழார் புராண ஆசிரியர் கூறுவதில் தவறில்லை யென்பது பெறப்படும்.

" ஆதித்தன் புகழ்மரபிற் குடி முதலோர் இடங்கழி யார்" என ஆசிரியர் சேக்கிழார் கூறுதலால் இடங்கழி நாயனர் சோழர் குடியிற் பிறந்தவரென்பது நன்கு பெறப் படும்.

திருத்தொண்டர் திருவந்தாதியில்,

சிங்கத்துருவனைச் செற்றவன் சிற்றம்பல முகடு கொங்கிற்கனக மணிந்த ஆதித்தன்குல முதலோன் திங்கட் சடையர் தமரதென் செல்வமெனப் பறைபோக் கெங்கட் கிறைவன் இருக்கு வேளுர்மன் இடங்கழியே ' என நம்பியாண்டார் நம்பிகளும் இடங்கழி நாயனரைச் சோழர் குடியிற் பிறந்தவரென்றே தெளிவாகக் கூறியுள் ளார். ஆகவே சேக்கிழார் புராண ஆசிரியர் இடங்கழி நாயனுரை முடி மன்னருள் ஒருவரெனக் கூறியது, சேக் கிழார் நம்பியாண்டார் நம்பி ஆகிய இருவர் கருத்துக்கும் ஒத்ததென்பது நன்கு புலனுகும். சேர சோழ பாண்டியர் களாகிய தமிழ் மூவேந்தர்கள் குறுநிலப் பரப்பைஆண்ட காலத்தும் அவர்களை முடிவேந்த ரெனப் போற்றியுரைத்தல் பண்டைத் தமிழராட்சியிற் பற்றுடைய முன்னேரது செய லாகும். தமிழ் மூவேந்தரல்லாத பிறர் தம் காலத்துப் பெருநிலப்பரப்பையாளும் பேராற்றல் பெற்று விளங்கினும்