பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/816

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

800

பன்னிரு திருமுறை வரலாறு


வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பாகிய இத்தமிழகத் தில் அன்னேரை மூவேந்தரைப் போன்று முடிமன்னர் எனப் பாராட்டிக் கூறும் வழக்கத்தினைத் தமிழ் மக்கள் மேற்கொண்டதில்லை. களந்தை மன்னவளுகிய கூற்று வர் என்பார், சோழநாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றித் தில்லை வாழந்தணர்களைக் கொண்டு தில்லையில் முடிசூட்டிக் கொள்ள விரும்பியபொழுது, ' நாங்கள் சோழகுலத்தாருக் கேயன்றி மற்றவர்களுக்கு முடிசூட்ட மாட்டோம் என மறுத்துரைத்துத் தில்லைவாழந்தணர்கள் சேரநாட்டிற்குச் சென்று தங்கினர் எனப் பெரிய புராணத்திற் கூறப்படுத லால் இச்செய்தி இனிது விளங்கும். எனவே ஐயடிகள் காடவர் கோன், கழற்சிங்கன் என்னும் பல்லவ மன்னர்கள் பெருவேந்தராயினும் அவர்களது மரபு, தமிழ் மூவேந்தர் மரபினைப் போன்று படைப்புக்காலந்தொட டு அரசு புரிந்து வரும் பழங்குடியெனத் தமிழ் மக்களால் மதிக்கப் பெருமை யின், பல்லவ மன்னராகிய இவ்விருவரையும் சேக்கிழார் புராண நூலாசிரியர் குறுநிலமன்னரெனவே குறிப்பிடுவா ராயினரென்க.

நம்பியாரூரர் பாடிய திருத்தொண்டத் தொகையில் அவரால் புகழ்ந்து போற்றப் பெற்ற அடியார்கள் அறுப தின்மரையே இயலிசை வல்லோர், இசை வல்லோர், இயல் வல்லோர் என இந்நூலாசிரியர் வகுத்துக் கூறுகின் ரு ராதலின், அவ்வடியார்களைப் போற்றிய சுந்தரரை அவர் களோடு சேர்த்து இன்னதுறையில் வல்லவரெனச் சொல்ல வேண்டிய இன்றியமையாமையில்லை. திருநாளைப் போவார், திருக்கோயிலில் வீணைக்கும் யாழுக்கும் வேண் டிய நரம்பு போர்வைத்தோல் முதலியன் கொடுத்துவுதலும் ஆடுதலும் பாடுதலுமுடையராய்த் தொண்டு செய்திருந் தார் என ஆசிரியர் சேக்கிழார் கூறுதலால் நந்தனர் இசையில் வல்லவர் எனச் சேக்கிழார் புராண நூலாசிரியர் குறித்தது மிகவும் பொருத்தமுடையதேயாகும். சேக்கிழார் புராணமென வழங்கும் திருத்தொண்டர் புராண வரலாற் றினைப் பாடியவர் கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் என முன்னேரனைவரும் உடன்பட்டுரைத்தலானும்,

திருக்கிளரும் கயிலைமலைக் காவல் பூண்ட

செல்வமலி திருநந்தி மரபில் வந்து கருக்குழியில் எமை விழா தெடுத்தாட்கொள்ளும்

கருணைமிகு மெய்கண்ட தேவர் தூய