பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/818

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

802

பன்னிரு திருமுறை வரலாறு


ஆசிரியர் சேக்கிழார் நாயனரைக் குறித்து வழங்கியதன் றென்றும் அறிஞர் மு. இராகவையங்காரவர்கள் தெளி வாக விளக்கியுள்ளார்கள். அறிஞர் அ. கோபிநாதராய ரவர்கள் தாமெழுதிய சோழவமிச சரித்திரச் சுருக்கத்தில் முதற் குலோத்துங்க சோழன் வேண்டுகோளின் மேல் சேக்கிழார் பெரிய புராணம் பாடினர் எனக் குறிப்பிட்டுள் ளார்கள். சேக்கிழார் தம் காலத்துச் சோழ வேந்தனைத் தம் நூலுள் அநபாயன் என்ற சிறப்புப் பெயராற் சிறப் பித்துப் போற்றியுள்ளார். அநபாயன் என்னும் இப்பெயர் முதற் குலோத்துங்க சோழன் காலத்து வழங்கியதன் றென்பதும் இரண்டாம் குலோத்துங்க சோழனைக் குறித்தே முதன் முதல் வழங்கத் தொடங்கிய தென்பதும் கல்வெட்டுக்களாலும் குலோத்துங்க சோழனுலாவாலும் இனிது புலன தலின் சேக்கிழார் முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்தவரல்லரென்பது நன்கு தெளியப்படும்.

சேக்கிழார் புராண ஆசிரியர், சேக்கிழார் காலத்துச் சோழ மன்னனை அபயன் எனவும் அநபாயன் எனவும் குறித்துப் போற்றியுள்ளார். சேக்கிழார் நாய னுர் தம்மை ஆதரித்துப் போற்றிய சோழ வேந்தனைத் தாம் பாடிய திருத்தொண்டர் புராணத்துள் பத்து இடங்களிற் பாராட்டியுள்ளார். அப்பாடல்களுள் அநபாயன் என்ற பெயரையே சிறப்பாகக் குறித்துள்ளார். இச்செய்யுட் களில் சேக்கிழார் நாயனுர் சோழ மன்னனைக் குறித்து வெளியிட்ட செய்திகளும் ஒட்டக் கூத்தர் தம்மை ஆதரித்த அநபாய மன்னணுகிய இரண்டாங் குலோத்துங்கனைப் பாராட்டிக் கூறிய பகுதிகளும் ஒத்துக் காணப்படுகின்றன. இவ்விரண்டாங் குலோத்துங்கன் மகளுகிய திரிபுவனச் சக்கரவர்த்தி இரண்டாம் ராசராச சோழனது 17-ம் ஆட்சியாண்டி ல் திருமழபாடித் திருக்கோயிலிற் பொறிக்கப் பெற்றுள்ள கல்வெட்டொன்றில் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து ... குன்றத்துர்ச் சேக்கிழான் மாதேவடிகள் ராம தேவனை உத்தம சோழப் பல்லவராயன்" என்பார் திருமழபாடித் திருக்கோயிலுக்குத் தொண்ணுறு

1. சாசனத் தமிழ்க் கவி சரிதம் பக் 75,76. 2. சோழ வமிசச் சரித்திரச் சுருக்கம் பக் - 82,33.