பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/820

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§4. ஆன்னிரு திருமுறை வசன்ாறு

பெயர் இரண்டாங் குலோத்துங்கனுக்கு உரியதென்பது கல்வெட்டுக்களாலும், ஒட்டக் கூத்தர் அவனைக் குறித்துப் பாடிய நூல்களாலும் தெளிவாகத் தெரிகின்றது. ஆகவே சேக்கிழாரைக்கொண்டு பெரிய புராணம் பாடுவித்த வேந் தன் இரண்டாங் குலோத்துங்க சோழனென்பது நன்கு துணியப்படும். இச்செய்தி இரண்டாம் ராச ராசனுக்குப் பின் வந்த இரண்டாம் ராசாதி சாசனது ஒன்பதாம் ஆட்சி யாண்டில் திருவொற்றியூர்க் கோயிலிற் பொறிக்கப்பட்ட கல்வெட்டிகுலும் உறுதிப்படுகின்றது.

" திருப்பங்குனி யுத்திரத்து ஆருந்திருநாளான புதன் கிழமையும் ஏகாதசியும் பெற்ற ஆயில்யத்தினன்று படம் பக்க நாயகதேவர் திருமகிழின் கீழ்த் திருவோலக்கஞ் செய்தெழுந்தருளியிருந்து ஆளுடைய நம்பி பூரீ புராணங் கேட்டருளா நிற்க " எனவரும் அக் கல்வெட்டுப் பகுதி யால் இரண்டாம் ராசா திராச சோழன் தனது ஒன்பதாம் ஆட்சியாண்டில் திரு வொற்றியூர் த் திருக்கோயிலில் நிகழ்ந்த பங்குனியுத்திரத் திருநாளுக்கு வந்திருந்தன னென்பதும், ஆருந் திருநாளில் ஆளுடைய நம்பி பூ புரா ணம் படிக்கப்பெற்ற தென்பதும் அதனை அரசனுடனிருந்து கேட்டவர்கள் அவ்வூர்த் திருமடத்தின் தலைவர் சதுரானை பண்டிதரும் சோம சித்தாந்தம் வக்காணிக்கும் வாகீச பண்டிதரும் கோயிலதிகாரிகள் பிறரும் என்பதும் நன்கு புலனும். ஆளுடைய நம்பி யென்பது சுந்தரரது பெயர். அவரைப் பற்றிய புராணமே திருவொற்றியூர்க் கோயிலிற் படிக்கப்பட்டதென்று தெரிகிறது. இங்குக் குறிப்பிடப் பட்ட ஆளுடைய நம்பிகள் பூரீ புராண மென்பது சேக்கிழா ரியற்றிய திருத்தொண்டர் புராணத்துளடங்கிய சுந்தரர்

புராணமாகவே இருத்தல் வேண்டும்.

இரண்டாம் ராசராச சோழனது 19-ம் ஆட்சியாண்டில் குன்றத்தூர்ச் சேக்கிழான் பாலருவாயன் களப்பாளராயன் என்பார், திருவரத்துறையில் நிகழும் மாசி வைகாசி திருவிழாக்களில் ஆளுடைய பிள்ளையார் மாறன் பாடிக்கு எழுந்தருளுதற்கு நிலமளித்துள்ளார். இவரே மூன்ருங் குலோத்துங்க சோழனது இரண்டாம் ஆட்சியாண்டில் கோட்டுர்க் கோயிலில் திருவிளக்கெரிக்கச் சில பொற் காசுகள் வழங்கியுள்ளார். பெரிய புராண ஆசிரியராகிய