பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/821

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் நாயஞர் காலம் 鯰屬下

சேக்கிழார்க்குப் பாலருவாயர் என்ற பெயருடைய தம்பி யொருவர் இருந்தமையும் அவர், தம் தமையன் மேற் கொண்டிருந்த அமைச்சர் பதவியை அவருக்குப் பின் ஏற்று நடத்தினமையும் சேக்கிழார் புராணத்தால் அறியப் பட்டவை. ஆகவே இச்சாசனங்களிற் குறிக்கப்பட்ட பாலருவாயரே சேக்கிழார் க்குத் தம்பியாராகச் சேக்கிழார் புராணங் கூறும் பாலருவாயர் எனக் கொள்ளுதற்குப் பெரிதும் பொருத்தமுளது. குன்றத்துார் என்ற ஊர்ப் பெயரும் சேக்கிழாரென்ற குடிப்பெயரும் பாலருவாயர் என்ற , இயற்பெயரும் காலமும் சேக்கிழார் புராண வர லாற்றுக்கு இயைய அமைந்துள்ளன. எனவே இரண்டாங் குலோத்துங்களுகிய அநபாயனது ஆட்சியின் (கி. பி. 11881146) இடைக்காலத் தொடங்கி மூன்ருங் குலோத்துங்க னது ஆட்சித் தொடக்கம் வரை 35, 40 ஆண்டுகள் வாழ்ந்த வர் இப்பாலருவாயரென்பது நன்கு பெறப்படும். அநபாய சோழன் பாலருவாயர்க்குத் தொண்டைமான் என்ற பட்டம் அளித்து அவரைத் தன் அமைச்சராக்கிக்கொண்ட னன் எனச் சேக் கிழார் புராணங் கூறுதற்கேற்ப இரண்டாங் குலோத்துங்கனது 12-ம் ஆட்சியாண்டில் அமைந்த சாசனம் ஒன்றிஞல் அம்மன்னன் தன் அமைச்சனை தொண்டைமானுக்குச் சில கட்டளைகள் நிறைவேற்றுதற்கு ஆணையிட்ட செய்தி தெரிகின்றது.

இதுகாறும் எடுத்துக்காட்டிய குறிப்புக்களால் இரண் டாம் ராசராசனது 17-ம் ஆட்சியாண்டில் திருமழபாடிக் கோயிலுக்கு நிபந்தமளித்த குன்றத்தூர்ச் சேக்கிழான் மாதேவடிகள் ராமதேவனை உத்தமசோழப் பல்லவ ராயன் என்பவரே பெரியபுராணம் பாடிய சேக்கிழார் நாயனரென்பதும், அவரை ஆதரித்துப் பெரியபுராணத்தை இயற்றச் செய்த அநபாயசோழன் என்பவன் இரண்டாங் குலோத்துங்கனே யென்பதும், ஆசிரியர் சேக்கிழார் இரண்டாங் குலோத்துங்கசோழனுக்குப் பின் அவன் மகன் இரண்டாம் ராசராசனது 17ம் ஆட்சியாண்டிலும் வாழ்ந்தவ ரென்பதும், சேக்கிழாருடைய தம்பியார் பாலருவாயர் எனக் கூறப்படுபவர் குன்றத்துணர்ச் சேக்கிழான் பாலருவா யன் களப்பாளராயன் எனக் கல்வெட்டிற் குறிக்கப்பட்டவ ரென்பதும் அவர் இரண்டாங் குலோத்துங்கனது ஆட்சி யின் இடைப்பகுதி தொடங்கி மூன்ருங் குலோத்துங்கன்