பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/822

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీక్షి பன்னிரு திருமுறை வரலாறு

ஆட்சியின் முற்பகுதிவரை வாழ்ந்தவரென்பதும் நன்கு பெறப்படுமென்பது அறிஞர் மு. இாகவையங்கார் டாக்டர் மா. இராசமாணிக்களுர் முதலிய ஆராய்ச்சியாளர்களது கொள் கையாகும். இக்கொள் கையே இப்பொழுது பெரும் பாலோரால் ஒப்புக்கொள்ளப்பட்டு வழங்கி வருகிறது.

இரண்டாங் குலோத்துங்கனுக்கு ஆசிரியராகவும் அவைக்களப் புலவராகவும் அவன் ஆட்சிக்காலம் முழுதும் நிலவியவர் ஒட்டக்கூத்தர். சைவசமயத்திற் பேரீடுபாடு டைய ஒட்டக் கூத் தருடைய மாணு வகைக் கல்வி பயின்ற இரண்டாங் குலோத்துங்கசோழன், சைவசமய அடியார் களின் மெய் வரலாறுகளை அறியாது சமணர்களால் புனைந் துரைக்கப்பட்ட சீவக சிந்தாமணிக் கதையை மெய்யென தம்பிப் பொழுது போக்கினன் என்றற்குச் சிறிதும் இடமில்லை. அன்றியும் இரண்டாங் குலோத்துங்கனுக்குப் பிறகு அவன் புதல்வன் இரண்டாம் ராசராசன் ஆட்சிக் காலத்தும் வாழ்ந்திருந்து இராசராசன் உலாவும் தக்க யாகப்பரணியும் இயற்றியவரும் தம் நூல்களில் இறைய ஞரகப் பொருள், களவழிநாற்பது, கலிங்கத்துப் பரணி ஆகிய நூல்களை மனமாரப் பாராட்டும் இயல்புடையவரும் சிவபத்திச் செல்வம் வாய்ந்தவரும் ஆகிய ஒட்டக்கூத்தர், தம் காலத்தில் திருத்தொண்டர் புராணம் பாடப் பெற்றிருப் பின் பத்திச்சுவை யொழுகும் அவ்வரிய நூலையும் அதனைப் பாடிய சேக்கிழாரையும் அந்நூல் தோன்று தற்குக் காரண மாக இருந்த சோழ மன்னனையும் தாம் இயற்றிய நூல் களில் புகழ்ந்து போற்றியிருப்பரென்பது திண்ணம். அப் புலவ்ர் பெருமான் தம் நூல்களில் திருத்தொண்டர் புராணத்தைக் குறிப்பிடாமையின், அந்நூல் அவர் காலத் திற்குப் பின்னரே இயற்றப் பெற்றிருத்தல் வேண்டுமென்று கருதவேண்டியுளது. சேக் கிழாரடிகள் கூறியுள்ள பேரம் பலம் பொன் வேய்ந்த அநபாயன் மூன் ருங் குலோத் துங்கனே யாவன். இவன் எதிரம்பலம் பொன் வேய்ந்தான் என்று இவன் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. எதிரம் பலமே பேரம் பல ம் என்று வழங்கியதென்பது அறியற் பாலது. எனவே எதிரம்பலம் பொன வேய்ந்த மூன் ருங் குலோத்துங்கனே பேரம்பலம் பொன் வேய்ந்த அநபாயன் என்பதும் இவ் வேந்தனே சேக்கிழாரடிகளைக் கொண்டு திருத்தொண்டர் புராணம் இயற்றுவித்தவன் என்பதும்