பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/823

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் நாயருச் காலம் క్ట్రి

தெள்ளிதிற் புலகுைமென்பது ஆராய்ச்சிப் பேரறிஞர் சதா சிவ பண்டாரத்தார வர்கள் கருத்தாகும். இக்கருத்தினை உறுதிப்படுத்தும் நிலையில் அவர்கள் கூறும் காரணங்களை நோக்குதல் இன்றியமையாததாகும்.

1. சேக்கிழார் தம் காலத்தில் வாழ்ந்த சோழ மன்னனைத் திருத்தொண்டர் புராணத்தில் பத்து இடங் களிற் பாராட்டியுள்ளார். அப்பாடல்களில் அபயன், அந பாயன், குலோத்துங்க சோழன் என்ற பெயர்களால் அவ் வேந்தன் குறிக்கப்பெற்றுள்ளான். மேற்குறித்த மூன்று பெயர்களுள் அபயன் என்பது முதற் குலோத்துங்க சோழனுக்குரிய சிறப்புப் பெயர். அநபாயன் என்பது இரண்டாங் குலோத்துங்கனுக்குரிய சிறப்புப் பெயர். குலோத்துங்கன் என்பது முதற்கு லோத்துங்கன் இரண்டாங் குலோத்துங்கன், மூன்ருங் குலோத்துங்கன் ஆகிய மூவர்க்கும் உரிய இயற்பெயராகும். இம் மூன்று மன்னர்களின் ஆட்சிக் காலங்களில் வரையப்பட்ட கல் வெட்டுக்களையும் இவர்களைப் பாராட்டிப் போற்றிய தமிழ் நூல்களையும் ஆராய்வார்க்கு இப்பெயர் வழக்கம் இனிது புலகுைம். முதற் குலோத்துங்கனுக்குரிய அபயன் என்ற சிறப்புப் பெயர் அவன் மகன் வயிற்றுப் பேரன் இரண்டாங் குலோத்துங்க சோழனுக்கும் வழங்குகின்றது. இதனை யுற்றுநோக்குங்கால் சோழ மன்னர்களை அவர்தம் முன்ஞேர்க்குரிய சிறப்புப் பெயர்களாற் போற்றும் வழக்க முண்டென்பது நன்கு புலனுகின்றது. சேக்கிழார் தம் காலத்துச் சோழ மன்னனை இரண்டாங் குலோத்துங்கனுக் குரிய சிறப்புப் பெயராகிய அநபாயன் என்ற சொல்லாற் போற்றியதுடன் முதற் குலோத்துங்க சோழனுக்குரிய அபயன் என்ற பெயராலும் இயைத்துப் போற்றி யுள்ளார். இங்ங்னமே இரண்டாங் குலோத்துங்கனுக்குரிய அநபாயன் என்ற பெயரும் அவன் மரபிற்ருேன்றிய பின்ளுேளுெருவனுக்கும் உரித்தாகி வழங்கியிருத்தலுங் கூடும். ஆகவே அநபாயன் என்னும் பெயர் வழக்க மொன்றே கொண்டு சேக்கிழாரால் அநபாயன் எனப் பாராட்டப் பெற்றவன் இரண்டாங் குலோத்துங்கனே என ஒருதலையாகத் துணிதற்கியலவில்லை.

3. பிற்காலச் சோழர் சரித்திரம். இரண்டாம் பகுதி.

நக 邸 இ பக் 167, 168,