பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/824

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் நாயகுர் காலம் §§§

திருப்புறம்பயத்திறைவர்க்குக் கொடுத்த நிபந்தமும், இரண்டாங் கல்வெட்டில் அவனும் காடுடையான்குற்றி திருச்சிற்றம்பலமுடையான் என்பவனும் சேர்ந்தளித்த நிபந்த மும் முறையே குறிக்கப்பெற்றுள் ளன. எனவே இக்கல்வெட்டிரண்டும் காலமுறைப்படி ஒன்றன்பிளுென்ருக வெட்டப்பட்டனவே என்பது நன்கு தெளியப்படும். ஆகவே கல்வெட்டுத் துறையினர் கருதுமாறு இக் கல் வெட்டுக்களிரண்டும் முறை மாறி வெட்டப்பட்டன என்று சொல்லுதற்குச் சிறிதும் இடமில்லை யென்பது நன்கு புலம்ை. முதற்கல்வெட்டிற் குறிப்பிட்ட திரிபுவனச் சக்கரவர்த்திகள் ராஜராஜதேவனே மூன்ரும் ராஜராஜ னென க்கொண்டால் அவனுக்குப்பின் குலோத்துங்க னெ ைனும் பெயருடைய சோழமன்னர் எவரும் இல்லை. இந்நிலையில் குலோத்துங்கன் ஆட்சிக்காலத்துக் கல் வெட்டினைப் பின்னர்ப் பொறிப்பதற்கு எத்தகைய இயை பும் இல்லாமற் போகிறது. அன்றியும் கல்வெட்டுத்துறை யாளர் கருதுமாறு முதற்கல்வெட்டிற் குறிப்பிட்ட இராச ராசனை மூன்ரும் ராசராசனெனவும் இரண்டாம் கல்வெட் டிற் குறிக்கப்பட்ட பேரம்பலம் பொன் வேய்ந்த சோழனை இரண்டாங் குலோத்துங்கனெனவும் கொண்டால் இரண் டாங் குலோத் கங்களது ஏழாவது ஆட்சிய்ாண்டில் திரும் புறம்பயத்திருக்கோயிலுக்கு நிபந்தமளித்த ஆலங்குடை யான் அடிகள் புறம்பியனென்பர்ன், மூன்ரும் ராசராசனது பதின்மூன்ரும் ஆட்சியாண்டிலும் இருந்து நிபந்தமளித் தான் என்று கொள்ளுதல் வேண்டும். இரண்டாங்குலோத் துங்கனது ஏழாவது ஆட்சியாண்டாகிய கி. பி. 1140-ம் ஆண்டிற்கும் மூன்ரும் ராசராசனது பதின்மூன்ரும் ஆட்சி யாண்டாகிய கி. பி. 1229-ம் ஆண்டிற்கும் நடுவே எண்பத் தெட்டாண்டுகள் இடைவெளியேற்படுகின்றது. ஆலங் குடை யான் அடிகள் புறம்பியன் என்பான் முதல் நிபந்த மளித்த நாளில் அவனுக்கு ஏறக்குறைய இருபது வய தென்று வைத்துக்கொண்டாலும் அவன் இவ்வுலகில் வாழ்ந்த ஆண் டு 109 ஆகிறது. ஆகவே கல்வெட்டுத்துறை யாளர் கூற்று ஏற்புடைய தன்றென்பதும் மேற்காட்டிய திருப்புறம்பயக் கல்வெட்டிற் குறித்த இராசராசன் இரண் டாம் ராசராசனேயென்பதும் அவனது கல்வெட்டிற்கு

அடுத்துவரையப்பட்ட கல்வெட்டிற் குறிக்கப்படும் பேரம்