பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/827

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$4% பன்னிரு திருமுறை வரலாறு

செய்தி கூறப்பட்டுளது. அச்சுலோகத்திற் குறிக்கப்பட்ட முகமண்டபம் என்பது யாது? அதுவே எதிசம்பலமெனப் படும் பேரம்பலமாகும். மூன்ருங்குலோத்துங்கன் எதிரம் பலத்தைப் பொன் வேய்ந்தபோது அதன் குறட்டிலே முன் குளிற் பொறிக்கப்பட்டிருந்த பழைய கல்வெட்டுகளைப் படியெடுத்து வேருே.ரிடத்திற் பொறிக்கச்செய்தனனென் பது தில்லைத் திருக்கோயிலிலுள்ள கல்வெட்டொன்றிற் கூறப்பட்டுள்ளது."

5. சேக்கிழார் சோழநாட்டுத் திருநாகேச்சரத்திருக் கோயிலில் வைத்துள்ள பேரார்வத்தால் தம்முடைய சொந்த ஊராகிய குன்றத்தூரிலும் திருநாகேச்சரமெனப் பெயரிய திருக்கோயிலைக்கட்டினர் எனச் சேக்கிழார் புராணம் கூறும். இங்ங்னம் குன்றத்தூரிற் சேக்கிழாராற் கட்டப்பட்ட திருநத கேச்சரத் திருக்கோயிலிற் பொறிக்கப் பட்ட கல்வெட்டுகளில் மிகவும் பழமையுடையன மூன்ருங் குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டுகளேயாகும். இங் கனமாகவும் "குன்றத்துர்த் திருநாகேச்சரத் திருக்கோயிலி லுள்ள 44 கல்வெட்டுக்களைக் கானின் அவற்றில் பழமை யான்வை இரண்டாங்குலோத்துங்கன் காலத்தனவே யாம்" என உறுதியாகக் கூறுவாருமுளர். அவர்கள் கூறு மாறு அக்கல்வெட்டுகளை இரண்டாங் குலோத்துங்கன் காலத்தன எனக்கொள்ளுதற்கு இயலவில்லை. ஏனெனின், அத்திருக்கோயிலில் மூன்ருங்குலோத்துங்கனது 2-ம் ஆண்டு முதல் 33-ம் ஆண்டுவரையமைந்த கல்வெட்டுக்கள் சிலவும் தொடர்ச்சியாக வரையப்பட்டுள்ளன. மூன்ருங் குலோத்துங்கனுக்கு முந்திய இரண்டாம் ராசா திராசனு டைய கவ்வெட்டுக்களோ அவனுக்கு முந்திய இரண்டாம் ராசராசனுடைய கல்வெட்டுக்களோ இத்திருக்கோயிலிற் பொறிக்கப்பெறவில்லை. இக்கோயில் இரண்டாங்குலோத் துங்கன் காலத்திலேயே கட்டப்பெற்றிருக்குமாயின் அவ் வேந்தன் காலத்திலோ அவன் மகன் இரண்டாம் ராச ராசன் காலத்திலோ அன்றி அவனுக்குப்பின் ஆட்சிபுரிந்த இரண்டாம் ராசா திராசன் காலத்திலோ இக்கோயிலுக் கென வழங்கப்பெற்ற நிபந்தங்களைக் குறித்த கல் வெட்டுக்கள் இக்கோயிலில் வரையப்பெற்றிருக்கும்.

1. தென்னிந்தியக் கல்வெட்டு தொகுதி IV எண் 222. 2. பெரிய புராண ஆராய்ச்சி, பக், 42.