பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/828

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் நாயனுர் காலம் 繼魯

அன்ளுேர்காலத்துக் கல்வெட்டெதுவும் இக்குன்றத்துார்த் திருநாகேச்சரக் கோயிலிற் பொறிக்கப்படாமையால் இத் திருக்கோயில் மூன் ருங்குலோத்துங்க சோழனது ஆட்சி யின் தொடக்கத்திலேதான் கட்டப்பெற்றிருத்தல் வேண்டு மென்பது நன்கு துணியப்படும். அன்றியும் இரண்டாம் ராசராசன் காலத்தில் சிறப்புற்று விளங்கிய சேக்கிழார் குடும்பத்தவர் திருப்பாசூரிலுள்ள திருக்கோயிலுக்கு நிபந்தமளித்து உள்ளனர். இத்திருநாகேச்சரத் திருக் கோயிலுக்கு மூன் ருங் குலோத்துங்கன் காலத்திற்கு முன் சேக்கிழார் குடும்பத்தவர்களோ அன்றி ஏனைய அன்பர் களோ எத்தகைய நிபந்த மும் அளித்ததாகத் தெரியவில்லை. மூன்ருங் குலோத்துங்கனுக்குப்பின் அவன்மகன் மூன்ரும் இராசராசனது 25-ம் ஆட்சியாண்டில் தான் சேக்கிழான் வரந்தரு பெருமாள் திருவூரகப் பெருமாள் என்பவர் இத் திருக்கோயிலுக்கு நிபந்தமளித்துள்ளார்.

1929-ம் ஆண்டு அறிக்கையிற் குறிக்கப்பட்ட 221-ம் எண்ணுள்ள கல்வெட்டு திரிபுவனச் சக்கரவர்த்திகள் ராச சாசதேவரது 19-ம் ஆண்டில் திருவரத்துறையிலிருந்து திருஞான சம்பந்தப்பிள்ளையார் மாசி வைகாசி விழாக் காலங்களில் மாறன் பாடிக்கு எழுந்தருளுவதற்கும் பிற பணிகளுக்குமாகச் சேக்கிழான் பாலருவாயன் களப்பாள ராயன் என்பார் நிலதான ஞ் செய்தனரெனக் குறிப்பிடு கின்றது. திரிபுவனச் சக்கர வர்த்திகள் ராசராசன் எனச் சிறப்பிக்கப்படுவோர் இரண்டாம் ராசராச சோழனும் மூன்ரும் ராசராச சோழனு மேயாவர். அவருள் இரண்டாம் ராசராசசோழன் தனது பதிஞரும் ஆட்சியாண்டு நிறைந்து பதினேழாம் ஆட்சியாண்டின் தொடக்கத்திலேயே இறந்து போயிஞனென்பது ஆராய்ச்சியாளர் துனிபாகும். ஆ க வே 19-ம் ஆட்சியாண்டில் திருவரத்துறையில் வரையப்பட்ட கல்வெட்டின் காலத்தவன் மூன்ரும் ராச ராசன் எனக் கொள்ளுதலே பெரிதும் பொருத்தமுடைய தாகும். திருவாளர் நீலகண்ட சாத்திரியாரவர்களும் இதனை மூன்ரும் ராசராசன் காலத்துக் கல்வெட்டாகவே கொண்டுள்ளார். இப் பாலருவாயன் என்பார் மூன்ருங் குலோத்துங்கனது ஆ ட் சி யி ன் இரண்டாமாண்டில் கோட்டுர்க்கோயிலில் நுந்தா விளக்கெரிக்கப் பொருள்

1. பிற்காலச் சோழர் சரித்திரம் பகுதி II பக். 125,