பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் 67

எனவும் வரும் திருவாசகப் பகுதிகளில் விரித்துக்கூறிய திறம் படித்து மகிழத்தக்கதாகும்.

குதிரைச் சேவகளுக வந்த இறைவனைப் பாண்டியன் கண்ணுரக் கண்டு மகிழ்ந்தனணுயினும், அங்ங்ணம் குதிரைச் சாத்தொடும் வந்த அத்தலைவன் முழு முதற் கடவுளாகிய சிவபெருமானே யென்ற உண்மையைச் சிறிதும் உணரப் பெற்றிலனென்பது,

"ஈண்டியமாயா விருள் கெட எப்பொருளும் விளங்கத்

தூண்டிய சோதியை மீனவனுஞ் சொல்ல வல்லனல்லன் "

என வாதவூரடிகள் தெளிவாகக் கூறுதலால் இனிது புலளும்.

ணரப்பட்ட

களாய மாறய

அடிகள் பொருட்டு இறைவனுற் ெ

குதிரைகள் யாவும் அன்றிரவே மீண்டும் յ5ն

  • , ... செய்தியினை,

பெரியதென்னன் மதுரை யெல்லாம் பிச் சதேற்று

பெருத் துறையாய் அரிய பொருளே யவிநாசியப்பா பாண்டி வெள் மே

தெரிய வரிய பரஞ்சோதி செய்வதொன்று மறியேனே ”

என்ற பாடலில் அடிகள் குறிப்பாகச் சுட்டியுள்ளார். இறைவன் கொணர்ந்த குதிரைகள் நரிகளாய் மாறியபின்பே அவை முன்னே நிலையில் நரிகளாயிருந்தன என்னும் உண்மை புலப்படுமாதலானும், பெருந்துறை ஈசன் கரியைக் குதிரையாக்கிய அளவில் அமையாது அக்கு திரைகளை

தி மயங்கச்

空う

மீண்டும் நரிகளாக மாற்றி மதுரை மக்களே ம

செய்தனன் என்ற கருத்தமைய நரியைக் குதிரைப் பரி யாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்துப், பெரியதென்னன் மதுரையெல்லாம் பிச்சதேற்றும் பெருந்துறையாய் ' என அடிகள் இறைவனை நெஞ்சநெக்குருகிய போற்றுதலானும், குதிரைச் சேவகனுகிய இறைவனுல் மதுரை நகரத்தே கொண்டு வந்து சேர்க்கப்பெற்ற குதிரைகள் மீண்டும் தம் பழையவுருவினை யெய்தி நரிகளாய் மாறியநிலை நன்குணரப் படும்.

அரச தண்டத்தில் அகப்பட்டு வருந்திய வாதவூரடிகளது மனக்கலக்கத்தை மாற்றத் திருவுளங்கொண்ட இறைவனது ஆணையால் வையையாற்றில் பெருவெள்ளம் தோன்றிக் கரையையுடைத்துக்கொண்டு மதுரை நகரத்தே புக்கதாக,