பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/830

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் நாயனுர் காலம் 氯露

கிைய மூன் ருங் குலோத்துங்கனுக்குத் தமிழ் மொழியிலும் சிவநெறிப்பனுவலாகிய அருள் நூல்களிலும் பற்றுண்டாகச் செய்தவர் உத்தமசோழப் பல்லவராகிய சேக்கிழாரென்று எண்ண இடமுண்டு. சோழகுமாரன் சீவக சிந்தாமணிக் கதையை மெய்யென நம்பி அதனையே படித்துப் பொழுது போக்கியதைக் கண்ட சேக்கிழார், சமணராற் புனைத் துரைக்கப்பட்ட அக்கதை இம்மை மறுமைக்கு ஒரு சிறிதும் பயன்படாதெனத் தெருட்டியதோடு அம்மன்னன் வேண்டுகோட்கிணங்கி மும்மைக்கும் பயன்தரும் சிவகதை யாகிய திருத்தொண்டர்களின் வரலாற்றை விரித்துரைக் கும் பெரிய புராணத்தை இயற்றினரெனச் சேக்கிழார் புராணங் கூறும். இவ்வாறு சிவகதையிற் கருத்தின் றிச் சிந்தாமணிக்கதையை மெய்யென நம்பிப் பயிலும் சூழ்நிலை, சிறந்த சிவநெறிச் செல்வராகிய ஒட்டக்கூத்தரின் மாளுக் கணுகிய இரண் டாங் குலோத்துங்கனுக்கு என்றும் நேர்ந்த தில்லை. ஒட்டக்கூத்தர் இயற்றிய நூல்களை ஊன்றிப் பயில் வார்க்கு இவ்வுண்மை நன்கு விளங்கும். எனவே சேக்கிழார் இரண்டாங் குலோத்துங்கனைத் திருத்துதல் வேண்டிப் பெரிய புராணம் பாடினரென்பதற்குச் சிறிதும் இடமில்லை என்பது புலளும். மூன் ருங் குலோத் துங்கனுடைய தந்தை யாகிய இரண்டாம் ராசராசன் குலோத்துங்கனது மூன்ரும் வயதிலேயே விட்டிறந்தனென்பது பல்லவராயன் பேட்டை கல்வெட்டாற் புலளுதலின் இரண்டாம் ராசா திராசனது ஆட்சியில் இராசராசபுரத்து அரண்மனையிற் பாதுகாவலில் வளர்ந்த இளைஞளுகிய மூன் ருங் குலோத்துங்கன் இளம் பருவத்தே கல்விபயிலுங்கால் சீவக சிந்தாமணிக்கதையை மெய்யென நம்பி அக்கதையைப் படித்து இன்புறுதலிற் பொழுது போக்கியிருத்தல் கூடும். அவனது உள நிலையை யுணர்ந்த சேக்கிழார் இலக்கிய நயம் ஒன்றே கருதிப் புனைந்துரையாகிய கதையை மெய்யென நம்புதல் கூடா தெனவும் தமிழகத்தில் உண்மையாக நிகழ்ந்த மெய் வரலாறுகளைத் தெரிந்து கொள்ளுதல் இன்றியமையா தெனவும் கூறி அவ்வரச குமாரனைத் தெருட்டினர் என்பதும் அவரது அறிவுரையை யேற்றுக் கொண்ட அவ் வரசிளங் குமரன் தனது ஆட்சியின் தொடக்கத்தே புலவர் பெருமானுகிய சேக்கிழாரைக் கொண்டு திருத்தொண்டர்

1. பிற்காலச் சோழர் சரித்திரம் 2-ம் பகுதி புக். 123-, 145, 14கி,