பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/832

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

818 பன்னிரு திருமுறை வரலாறு

முதலிகளில் ஒருவகிைய எதிரிகள் நாயன் பொத்தப்பிச் சோழன் என்பான், திருமுது குன்ற முடையார்க்கு விளக் கெரிக்க விட்ட நிபந்தம் அவ்வூர்க் கல்வெட்டிற் குறிக்கப் படுவதுடன் திருமுது குன்றத்துக் கோயிலிலுள்ள அளவு கருவி தேவாஸ்ரயன் என்ற பெயரால் வழங்கப்படு கின்றது. கோப்பெருஞ்சிங்கன் சோழ ராட்சிக்கு மாருகத் தனியாட்சி நிறுவிய பிற்காலத்திலும் தேவாஸ்ரயன் என்னும் இப்பெயர் வழக்கத்தைத் தன் கல்வெட்டுக்களில் மேற்கொண்டு குறிப்பிட்டுள்ளான்.? எனவே தேவாஸ்ர யன் என்னும் இப்பெயர், இவல்ை மதித்துப் போற்றுதற் குரிய மூன்ருங் குலோத்துங்கனது சிறப்புப்பெயராக இருத் தல் வேண்டும் என உய்த்துணரலாம். தேவாஸ்ரயன் என்ற சொல் தேவர்களால் விரும்பி அடையத்தக்கவன் என்ற பொருளைத் தருவதாகும். திருவாரூரில் எழுந் தருளிய இறைவர் தம் கோயில் தானத்தார்க்கு அருளிய உத்தரவொன்றில் இவ்வரசர் பெருமானை நம் தோழன் எனக்கூறியுள்ளனரென்று அவ்வூரிலுள்ள இவனது இருபத்து நான்காம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டொன்று : கூறுகின்றது. நம்பியாரூரராகிய சுந்தரமூர்த்தி சுவாமி களுக்குத் திருவாரூர்ப்பெருமான் தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம் ' எனத் திருவாய்மொழிந்தமையால் அவர் தம்பிரான் தோழர்' என அழைக்கப்பெற்ற வரலாறு பெரிய புராணத்திற் கண்டதாகும். சுந்தரமூர்த்தி சுவாமி களுக்குப் பின் சிவபெருமானுக்குத் தோழனுகும் பேறு பெற்றவன் இம்மூன்ருங் குலோத்துங்க சோழனதலால் இவனைத் தேவாஸ்ரயன் என்ற சிறப்புப் பெயராற் போற்றுதல் .ெ ப. ரி து ம் பொருத்தமுடையதேயாகும். சேக்கிழார் கூறும் தேவாசிரியன் என்னும் பெயர் இவ் வேந்தனைக் குறித்த சிறப்புப் பெயராயினும் அன்றி வேருேர் ஏதுப் பெயராயினும் ஆகுக, அப்பெயராற் குறிக்கப்படும் சபா மண்டபமாகிய ஆயிரக்கால் மண்ட பத்தைக் கட்டியவன் இம் மூன்ருங் குலோத்துங்கனே யென்பது திரிபுவன விரேச்சுரக் கல்வெட்டால் இனிது

கல்வெட்டுத் தொகுதி VII. எண் 149. கல்வெட்டுக் தொகுதி XII. எண் 118. Ins. 554 of 1904, பிற்காலச் சோழர் சரித்திரம் 11ம் பகுதி. பக். 160, 161.