பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/833

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் நாயஞர் காலம் 849

பெறப்படுதலின், சேக்கிழார் இம்மூன்ருங் குலோத்துங்கன் காலத்திற் பெரிய புரான மியற்றினரெனக் கொள்ளுதல் பெரிதும் பொருத்தமுடையதாகும்.

தில்லைத் திருக்கோயிலிற் சேக்கிழார் பெருமான் அமர்ந்து திருத்தொண்டர் புராணத்தை இயற்று தற்கு இடமாக விளங்கிய ஆயிரக்கால் மண்டபமும் இம்மூன்ருங் குலோத்துங்கன் ஆ ட் சி யி ல் கட்டப்பெற்றிருத்தல் வேண்டும். இவ்வேந்தர் பெருமானைத் தில்லைச் சிற்றம்பல வாணருடைய ஏகபக்தன் எனத் திரிபுவன வீரேச்சுரத்தி லுள்ள கல்வெட்டொன்று கூறுதலால் இவ்வரசர் பெருமான் தில்லைப் பெருங்கோயிலிற் பல திருப்பணிகளைச் செய்து நிறைவேற்றியவனென்பது நன்கு துணியப்படும். சேக்கிழார் பெருமான் அமர்ந்திருந்து திருத்தொண்டர் புராணம் பாடிய இடம் "ஐயிரு நூறுகால் மணிமண்டபம்' " எனச் சேக்கிழார் புராணங் கூறுதலானும், சேக்கிழார் தாம் இயற்றிய பெரியபுராணத்தில் மூன் ருங் குலோத்துங்களுற் கட்டப்பெற்ற திருவாரூர்ச் சபாமண்டபத்தைக் குறிப்பிடு தலசனும் அவ்வாசிரியர் திருத்தொண்டர் புராண மியற்றிய காலம் மூன்ருங் குலோத்துங்கன் ஆட்சிக் காலமே என்பது உறுதியாகத் தெரிகின்றது.

சோழ மன்னனுக்கு அமைச்சுரிமைபூண்ட சேக்கிழார் அம்மன்னனது தலைநகராய் விளங்கிய பழையாறை, இராசராசபுரம் (தாராசுரம்) என்னும் பதிக்கு அண்மையி லுள்ள திரு நாகேச்சரத்தில் தங்கியிருந்தாரெனத் தெரி கிறது. அங்கனம் தங்கிய காலத்துத் திருநாகேச்சரத் திறைவரை நாடோறும் போற்றி வழிபடுதலில் விருப்ப மிக்க சேக்கிழார் தாம் பிறந்த ஊராகிய குன்றத்துரிலும் சோழ நாட்டிலுள்ள திருநாகேச்சாத்தைப் போன்ற அமைப்பில் திருநாகேச்சசம் என்னும் பெயருடைய திருக் கோயிலைக் கட்டி தாள் வழிபாடும் திருவிழாவும் நடைபெறச் செய்தார் எனச் சேக்கிழார் புராணங் கூறுஞ் செய்தி முன்னர் விளக்கப்பட்டது. இங்கனம் சேக்கிழார் தம் சொந்த ஊராகிய குன்றத்துளரில் திருநாகேச்சரம் என்ற

1. 1908ம் ஆண்டின் தென்னித்தியக் கல்வெட்டுத்துறையின் ஆண்டறிக்கை ம்ே பகுதி 4ேம் பசா நோக்குக.

,ே சேக்கிழார் புராணம் ேேம் செய்யுள்.