பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/834

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

820 பன்னிரு திருமுறை வரலாறு

திருக்கோயிலைக் கட்டிய காலம் மூன்ரும் குலோத்துங்கனது ஆட்சியின் தொடக்கமாக இருத்தல் வேண்டும். குன்றத் துர்த் திருநாகேச்சாத்திலுள்ள 44 கல்வெட்டுக்களிலும் மிகவும் பழமையானது மூன்ருங் குலோத்துங்கனது ஆட்சி யின் இரண்டாம் ஆண்டில் வரையப்பட்ட கல்வெட்டே யாகும். மூன்ருங் குலோத்துங்க சோழன் அவ்வூரிற் சில நிலங்களால் வரும் வரிப்பொருளைக்கொண்டு குன்றத்தூர்த் திருநாகேச்சரமுடைய இறைவர்க்கு மாதந்தோறும் ரேவதி நக்ஷத்திரத்தில் சிறப்பு முறையில் வழிபாடு நிகழச் செய்ததனைக் குறிப்பிடுவது அக்கல்வெட்டு. இதுவே இக் கோயிலுக்கு வேந்தல்ை முதன் முதல் அளிக்கப்பட்ட நிபந்தமாகும். இதல்ை இவ்வேந்தன் சேக்கிழாரையும் அவரால் நிறுவப்பட்ட இத்திருக்கோயிலயும் நன்கு மதித்துப் போற்றியவனென்பது நன்கு புலனுகிறது. இவ் வேந்தன் இருபத்து நாலாவது ஆட்சியாண்டில் திரிபுவன வீரதேவன் என்னும் சிறப்புப் பெயரை யெய் தினுன். இவன் தனக்குரிய இச்சிறப்புப் பெயராற் கட்டிய திரிபுவன வீரேச்சுரம் என்ற திருக்கோயில் சோழ நாட்டில் திருநாகேச்சரம் என்ற ஊருக்கு அண்மையில் ஒரு கல் தொலைவில் அமைந்துள்ளது. சேக்கிழார் திருநாகேச்சரத் தில் தங்கியிருந்த காலத்தில் இத்திரிபுவன வீரேச்சுரத் திருக்கோயிற் பணியும் தொடங்கி நடைபெற்றிருத்தல்

கூடும்.

மூன்ருங் குலோத்துங்கன் ஆட்சியில் சேக்கிழான் வைராதராயன் என்பார் தில்லையில் தொண்டர் சீருரைத் தான் நந்தவனம் ' என்ற நந்த வனத்தை அமைத் துள்ளார். இங்கே " தொண்டர் சீருரைத்தான் " எனக் குறிப்பிடப்படும் இப்பெயர் திருத்தொண்டர் புராண மியற் றிய ஆசிரியர் சேக்கிழாரைக் குறித்து வழங்கும் சிறப்புப் பெயராகும். சேக்கிழார் குடும்பத்திற் பிறந்த வைராத ராயன் என்பார், தம் குடும்பத் தலைவராகிய சேக்கிழார்க் குரிய தொண்டர் சீருரைத்தான் என்னும் திருப்பெயரால் சேக்கிழார் விரும்பி வாழ்ந்த தில்லையிலே திரு நந்தவனம் அமைத்திருத்தலை யுற்றுநோக்கின் இச்செய்தி பெரிய புராண ஆசிரியர் வாழ்ந்த காலத்தை யொட்டியே நிகழ்ந்த

1. 1929-30ம் ஆண்டறிக்கை. கல்வெட்டெண் 200. 2. தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி Will. எண் 48.