பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/835

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் நாயஞர் காலம் 853;

தென உய்த்துணரலாம். திருத்தொண்டர் புராணத்திற்குச் சேக்கிழார் பொருள் விரித்தருளிச் செய்தபின் சோழ மன்னனும் சிவனடியார்களும் சேக்கிழார் பெருமானைத் தில்லையம்பலவர் திருமுன்னே தொண்டர்சீர் பரவுவார் . எனச் சிறப்பித்து ஞான முடி சூட்டிப் போற்றினர் எனச் சேக்கிழார் புராணம் கூறும். தொண்டச்சீர் பரவுவார் என்ற சிறப்புப் பெயரோடு பொருளால் ஒற்றுமையுடையதே தொண்டர் சீருரைத்தான் என்ற இப்பெயருமாகும். ஆகவே சேக்கிழார் தம் காலத்திலேயே தொண்டர் சீருரைத்தான் எனச் சிறப்பித்துப் போற்றப்பெறும் பெருஞ் சிறப்பெய்தினமை மேற்காட்டிய கல்வெட்டினுற் புலனுதல் காணலாம்.

இனி, சேக்கிழாருடைய தம்பியாராகக் கருதப்பெறும் சேக்கிழான் பாலருவாயன் களப்பாளராயன் என்பார், இரண்டாங் குலோத்துங் கனது 12-ம் ஆண்டில் களத் தூரில் வெட்டப்பட்ட கல்வெட்டொன்றில் தொண்டை மான் என்ற பட்டமுடைய அரசியலதிகாரியாகக் குறிக்கப் பட்டுள்ளார் எனக் கருதுவாகமுளர். திரிபுவனச் சக்கர வர்த்தி கோனேரின்மை கொண்டானது 12-ம் ஆண்டில் வெட்டப்பட்ட இக்கல்வெட்டில், களத்துணரைச் சூழ்ந்த சில நிலங்களே ஒன்று சேர்த்துக் குலோத்துங்க சோழன் திருத்தொண்டத் தொகை நல்லுரர் ன்று பெயரிட்டுப்

اة من

பெருந்திருக் கோயிலுடைய மகதேவர்க்குத் திருமட விளாகமாகவும் நந்தகனமாகவும் பயன்படுத்தும்படி

தொண்டைமான் என்னும் தலைவனுக்கு அரசாங்க உத் தரவு வந்த செய்தி குறிக்கப்பெற்றுளது. இக்கல்வெட்டிற் குறிக்கப்படும் அரசியலதிகாரியாகிய தொண்டைமான் என் பவர் குன்றத்துணர்ச் சேக்கிழார் குடும்பத்தைச் சார்ந்தவ ரென்ருே பாலருவாயரென்னும் இயற்பெ ருடையவ ரென்ருே எதுவுங் கூறப்படவில்லே. இந்நிலையில் தொண்டைமான் என்ற பெயரொன்றே பற்றி அவரைச் சேக்கிழார்க்குத் தம்பி யெனத் துணிதல் கூடாது.

இரண்டாம் இராசா திராச சோழனது ஒன்பதாம் ஆட்சியாண்டில் திருவொற்றியூர்க் கோயிலில் வெட்டப் பட்ட கல்வெட்டில் திருப்பங்குனி உத்தரத்து ஆருத் திரு

1 சாசனத் தமிழ்க்கவி சரிதம் பக்கம் ??.