பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/836

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$22 பன்னிரு திருமுறை வரலாறு

நாளான புதன்கிழமையும் ஏகாதசியும் கூடிய ஆயில்யத்தி னன்று சதுரானன பண்டிதர் வாகீச பண்டிதர் இரண்டாம் ராசா திராசன் முதலியவர்கட்கு முன் " படம் பக்க நாயக தேவர் திருமகிழின்கீழ்த் திருவோலக்கம் செய்து எழுந் தருளியிருந்து ஆளுடைய நம்பி யூரீ புராணம் கேட்டருளா நிற்க " என்ற அரிய செய்தி காணப்படுகின்றதென்றும் அக்கல்வெட்டிற் குறித்த ஆளுடைய நம்பி பூரீ புராணமென் பது சேக்கிழார் செய்த பெரிய புராணத்துள் அடங்கிய சுந்தரர் புராணமாகவே இருத்தல் வேண்டுமென்றும் கூறுவர் சிலர். இக்கல்வெட்டிற் குறிக்கப்படும் ஆளுடைய நம்பி யூரீ புராண மென்பது சேக்கிழார் பாடிய திருத் தொண்டர் புராணமே எனத் துணிந்து கூறுதற்கு இயல வில்லை. கன்னிவன புராணம், இறையான ரையூர் புராணம் எனக் கல்வெட்டுக்களிற் குறிக்கப்படும் தல புராணங்களைப் போன்று திருவொற்றியூர்க்குரிய தனிப் புராணத்திற் கூறப்படும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாற்றுப் பகுதியே இங்குக் குறிக்கப்பட்ட ஆளுடைய நம்பி யூரீ புராணமெனத் தெரிகின்றது. ஆசிரியர் சேக் கிழார் தாம் இயற்றிய பெரிய புராணத்திற்குத் திருத்தொண்டர் புராணமென்த பெயரையே வழங்கியுள்ளார். அதனை பூரீ புராணம் என்ற பெயரால் யாரும் வழங்கியதில்லை. கவிச் சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் தாம் பாடிய தக்கயாகப்பரணியில் திருஞான சம்பந்தப் பிள்ளையார் வரலாற்றை விரித்துக் கூறியது போன்று, ஆளுடைய நம்பியாகிய சுந்தரமூர்த்தி சுவாமி களது வரலாற்றை விரித்துக்கூறும் தனிப் புராணமே இக் கல்வெட்டிற் குறிக்கப்படும் ஆளுடைய நம்பி பூரீ புராணம் ஆக இருத்தல் வேண்டும். கல்வெட்டிற் காணப்படும் கன்னிவன புராணம் இறையான ரையூர் புராண முதலியன போன்று ஆளுடைய நம்பி பூரீ புராணம் என்னும் இதுவும் இக்காலத்திற் கிடைக்கவில்லை. ஆகவே திருவொற்றி யூர்க் கோயிலிற் படிக்கப்பெற்ற ஆளுடைய நம்பி பூரீ புராணமென்பது சேக்கிழார் பாடிய பெரிய புராணம் எனத் துணிந்து கூறுதற் கிடமில்லை. இரண்டாம் ராசராச சோழனுற் கட்டப்பெற்ற இராச ராசபுர (தாராசுர) க் திருக்கோயிலில் திருத்தொண்டத் தொகையிற் கூறப்படும்

பெரிய புராண ஆராய்ச்சி பக். 30 (டாக்டர் மா. இராச