பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/839

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் நாயகுர் காலம் 835

துங்கனுக்குத் தந்தையாகிய இரண்டாம் இராசராசன் ஆட்சியின் இறுதியிலும் இம் மூன்ருங் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்திலும் அரசியலதிகாரியாகவும் அருளாசிரிய ராகவும் விளங்கியவரென்பதும் நன்கு புலனும் என்பர் ஆராய்ச்சிப் பேரறிஞர் தி. வை. சதாசிவ பண்டாரத்தா ரவrகள.

சென்னி அபயன் குலோத்துங்க சோழன் ' எனச் சேக்கிழாரடிகளாற் பாராட்டப்பெற்ற குலோத்துங்கன் என்னும் சோழ மன்னன், இரண்டாங் குலோத்துங்கனே அன்றி மூன்ருங் குலோத்துங்கனே என்பது மேலும் ஆராய்ச்சிக்குரிய தொன்ரும். ஆயினும், திருத்தொண்டர் புராண ஆசிரியராகிய சேக்கிழாரடிகள், இரண்டாங் குலோத்துங்கனுக்கு மகனும் மூன்ரும் குலோத்துங்க னுக்குத் தந்தையும் ஆகிய இரண்டாம் இராசராச சோழன் ஆட்சியின் 17ம்-ஆண்டில் திருமழபாடித் திருக்கோயிலிற் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டிற் குறித்தவாறு அத்திருக் கோயிலுக்குத் தொண்ணுாறு பேராடுகளை நிபந்தமாக வழங்கிய ஜயங்கொண்ட சோழ மண்டலத்துக் குன்றத்துார் நாட்டுக் குன்றத்துர்ச் சேக்கிழான் மாதேவடிகள் ராமதேவஞன உத்தம சோழப் பல்லவராயன் என்பவரே என்பதனை மேற்குறித்த ஆராய்ச்சியாளர் பலரும் ஐயுறவுக் கிடனின்றி ஒத்துக் கொள்கின்றனர். ஆகவே, இரண்டாம் இராசராசனது ஆட்சியின் இறுதியாண்டாகிய பதினேழாம் ஆண்டில் திருமழபாடித் திருக்கோயிலுக்கு நிபந்தம் வழங்கிய சேக்கிழான் மாதேவடிகள் எனக் கருதப்படும் சேக்கிழார் நாயஞர், அம்மன்னனது தந்தையாகிய இரண்டாங் குலோத்துங்க சோழனது ஆட்சியின் பிற்பகுதி யிலும் இரண்டாம் ராசராசனது மைந்தளுகிய மூன் ருங் குலோத்துங்க சோழனது ஆட்சியின் முற் பகுதியிலும் வாழ்ந்திருந்தவர் எனக் கொள்ளுதல் பெரிதும் பொருத்த முடையதாகும்.